ராகுல் நடைப்பயணம்: புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தராமையா கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

ராகுல் நடைப்பயணம்: புதிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது சித்தராமையா கருத்து

பெங்களூரு, அக்.24 இந்தியா ஒற் றுமை நடைப்பயணம் மூலம் ராகுல் காந்தி,'யார்' என்பது நிரூபணமாகி உள்ளது என்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கருநாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப் பதாவது:-

அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தியின் வரலாற்று சிறப்பு மிக்க இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை கருநாடகத்தில்   நிறைவு பெற்றுள்ளது. ஜாதி, மதம், கட்சி பேதம் இன்றி கருநாடகத்தில் நடைபெற்ற ஒற்றுமை நடைப் பயணத்தில் கலந்துகொண்டு, இந்த நடைப்பணம் வெற்றி பெற வைத்த மக்களுக்கு என்னுடைய இதய பூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

கருநாடகத்தில் நடைபெற்ற ராகுல்காந்தி நடைப்பயணத்தில்ல் சிறுவர்கள், சிறுமிகள், மாணவர்கள், மாணவிகள், விவசாயிகள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், வயதானவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்று ஆதரவு அளித்திருந்தார்கள். இதன்முலம் ராகுல்காந்தியின் இந்த வரலாற்று நடைப்பயணத்தின் புதிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

ராகுல்காந்தியின் நடைப் பய ணத்தைப் பற்றி பல்வேறு பொய் மூட் டைகளை பா.ஜனதாவினர் அவிழ்த்து விட்டனர். நடைப்பயணம் பற்றி பார தீய ஜனதாவினர் தங்களது வாய்க்கு வந்ததை கூறி வந்தனர். தற்போது கருநாடகத்தில் இந்த நடைப்பயணம் வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ராகுல் காந்தி யார் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்த பயணத்தின் மூலம் கருநாடகத்தில் நடைபெற்று வரும் ஊழல் ஆட்சி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கருநாடகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். 

இவ்வாறு சித்தராமையா கூறி யுள்ளார்.


No comments:

Post a Comment