அன்றும் - இன்றும் - என்றும் தமிழ்நாடு
அமைதிப் பூங்காவாக தொடரவேண்டும் என்பதற்காகவே
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை விதித்தது தமிழ்நாடு அரசு
தஞ்சை, அக்.1 தமிழ்நாடு அன்றும்- இன்றும் - என்றும் அமைதிப் பூங்கா வாக தொடரவேண்டும் என்று விரும்பு கின்றோம்; அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஊர்வலம் நடத்துவதற்குத் தடை விதித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. நோய்க் கிருமிகள் என்று வரும்பொழுது, அதற்குச் சிகிச்சை தேவை - தடைதான் சிகிச்சையே தவிர, அதற்கு சிவப்புக் கம்பளத்தை விரிக்க முடியாது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். .
நேற்று (30.9.2022) தஞ்சைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'கலைஞர் செய்திகள்' தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்குத் தடை ஏன்?
செய்தியாளர்: ஆர்.எஸ்.எஸ். ஊர்வ லத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித் திருக்கிறதே, அதற்கு என்ன அவசியம்?
தமிழர் தலைவர்: அதுகுறித்து தெளி வாக அறிக்கை கொடுத்திருக்கின்றேன்.
ஏனென்றால், விஷக் கிருமிகள் தமிழ் நாட்டில் பரவக் கூடாது. விஷக் கிருமி களைவிட மோசமானது மதவெறியைப் பரப்பக்கூடிய ஓர் அமைப்பு.
மூன்று முறை தடை செய்யப்பட்ட
ஓர் இயக்கம்
இந்திய நாட்டின் அரசியல் வரலாற் றில், சமூக வரலாற்றில் இதுவரை மூன்று முறை தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் - ஆர்.எஸ்.எஸ். தவிர வேறு அமைப்பு உண்டா?
ஏன் ஆர்.எஸ்.எஸ். தடை செய்யப் பட்டது?
அந்தத் தடைகளை விலக்குவதற்கு அவர்கள் என்ன முறைகளைக் கையாண்டு வெளியே வந்தார்கள் என் பதை யெல்லாம் பார்க்கும்பொழுது, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஒற்றை ஆட்சியை இங்கு உருவாக்கவேண்டும் என்று நினைத்து வெறுப்பு அரசியலை நடத்திக் கொண்டு இருக்கும் சூழ்நிலையில், இந்தப் பெரியார் மண்ணான சமதர்ம பூமியில், சமூகநீதி மண் - திராவிட மாடல் ஆட்சியினுடைய சிறப்புகள் நடக்கக்கூடிய இந்த மண்ணில், மதக்கலவரங்களை உருவாக்கலாம் என்பதற்கான அடித்தளம் இருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டார்கள்.
பல இடங்களில், அவர்களே தங்களுக் குத் தாங்களே ‘‘சொந்தக் காசில் சூனியம் வைத்தார்கள்'' என்று வைதீகர்கள் சொல் லக் கூடிய பழமொழி போன்று இருந் ததற்கு பல ஆதாரங்கள் ஏற்கெனவே உண்டு.
ஆகவே, இந்த சூழ்நிலையில், அமை திப் பூங்காவாக தமிழ்நாடு என்றைக்கும் இருக்கிறது.
ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நேரத்தில், இந்தியா முழுவதும் ரத்த ஆறு ஓடிய நேரத்தில், அமைதிப் பூங்காவாக இருந்த ஒரே மாநிலம் தமிழ்நாடு மட்டும்தான்.
அந்த வரலாறு அன்றும்- இன்றும் - என்றும் தொடரவேண்டும் என்று விரும்புகின்றோம். எனவேதான், அப் படிப்பட்ட அமைப்புகள் ஊர்வலம் நடத்துவதற்குத் தடை விதித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
அரசியல் ரீதியாக, கருத்து களை கருத்தால் சந்திக்கக்கூடியவர்களைப் பற்றி, பேச்சுரிமை, எழுத்துரிமை என்று பேசலாம்.
ஆனால், அதேநேரத்தில், நோய்க் கிருமிகள் என்று வரும்பொழுது, அதற்குச் சிகிச்சை தேவை - தடைதான் சிகிச்சையே தவிர, அதற்கு சிவப்புக் கம்பளத்தை விரிக்க முடியாது.
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment