அனுமதி
முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவாக பேனா சின்னம் அமைக்க சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கலாம் என தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதி.
தீவிரம்
100 யூனிட் வரையிலான இலவச மின்சாரத்தை தானாக முன்வந்து விட்டுக் கொடுப்பதை பிரபலப்படுத்தும் முயற்சியில் மின்வாரியம் தீவிரம் காட்டி வருகிறது என உயரதிகாரி தகவல்.
அழைப்பு
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் செக் குடியரசு நாட்டில் உள்ள தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார்.
மீட்பு
தமிழ்நாடு அரசு நடவடிக்கையால் மியான்மரில் சிக்கிய 13 தமிழர்கள் மீட்கப்பட்டனர். அவர்களுக்கு பொருளாதார உதவி வழங்குவது குறித்து முதலமைச்சர் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.
பதவி
தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களாக 6 மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
தீர்வுகாண...
சுங்கச்சாவடி ஊழியர்களை பணி நீக்கம் செய்ததற்கு தமிழ்நாடு அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
நேரடி ஒளிபரப்பு
ஒன்றிய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து அதிகளவில் வெல்ல - வரும் 9ஆம் தேதி ஒரு நாள் கருத்தரங்கை தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்துகிறது. இதை இணைய தளம், அரசு கேபிள் டி.வி.யில் நேரடி ஒளிபரப்பு செய்வதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
'கடவுளர்கள்'
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே கோயில்களில் திருடிய 7 'கடவுளர்கள்" சிலை பறிமுதல், 2 பேர் கைது.
பறிமுதல்
பாரதீய ஜனதா கட்சி ஆளும் குஜராத்தில் ரூ.317 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது.
No comments:
Post a Comment