மைசூரு, அக்.6- காங்கிரசு கட்சி யின் மேனாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று (6.10.2022) பங்கேற்றுள் ளார்.
கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ராகுல் காந்தி தலைமையில் நடை பெறும் இந்திய ஒற்றுமை நடைப்பயணம், செப். 30 ஆம் தேதியில் இருந்து கருநாடகத் தில் நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று வரு கிறார்கள்.
ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தின்போது கருநாடக மாநிலத்தில் மைசூருவில் முகாமிட்டிருந்தார். அவரை காண் பதற்காகவும், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்பதற்காகவும் அகில இந்திய காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி அக்.3ஆம் தேதி மைசூருக்கு வருகை தந்தார்.
இருநாள்கள் விடுமுறைக்கு பிறகு, மண்டியா மாவட்டத்தில் இன்று (6.10.2022) காலை தொடங்கிய நடைப்பயணத்தில் ராகுல் காந்தியுடன் சோனியா காந்தியும் பங்கேற்றுள்ளார்.
மேலும், கருநாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment