இன்று (28.10.2022) 'சிகரம்' ச.செந்தில்நாதன் அவர்களுக்கு 81ஆவது பிறந்த நாள்.
1970களில், அவசரக் காலம் (Emergency) நடைமுறையில் இருந்த காலகட்டத்தில் ஆதிக்கத்திற்கு எதிரான குரலாக வெளிவந்த 'சிகரம்' இதழின் ஆசிரியர் - பதிப்பாளர். அதனாலேயே அவர் 'சிகரம்' செந்தில்நாதன்.
அதே காலகட்டத்தில் "மக்கள் எழுத்தாளர் சங்கம்" உரு வாக்கி இலக்கிய விமர்சனக் கூட்டங்கள் மூலம் அன்றைய இலக்கிய போக்குகள் குறித்தகூர்மையான விமர்சனங்களை முன்வைத்தவர். இன்றைய இலக்கியப் பிரபலங்கள் பலரின் எழுத்துக்களை அன்று சிகரத்தில் வெளியிட்டவர்.
கருத்துரிமைக்காக நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் தொடர்ந்துபோராடி வருபவர்.
எழுத்தாளர், விமர்சகர், பதிப்பாளர், பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர், வழக்குரைஞர் எனப் பல்துறை வித்தகராகத் திகழும் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் 81ஆவது பிறந்த நாளன்று மாலை 5 மணிக்கு சென்னை -8, எழும்பூர், காசா மேஜர் சாலையில் உள்ள விஷிஷிகீ அரங்கில் 'சிகரம்' ச. செந்தில்நாதன் : பாதை - பயணம் - படைப்புலகம் என்ற வே. குமாரவேல் அவர்களால் தொகுக்கப்பட்டு சந்தியா பதிப்பகம் பதிப்பித்துள்ள நூல் வெளியீட்டு விழாவை தமுஎகச - தென் சென்னை மாவட்டம் நடத்துகிறது.
உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் நீதியரசர் ஏ.கே.இராஜன், நீதியரசர் கே. சந்த்ரு, நீதியரசர் து. அரிபரந்தாமன், சிஅய்டியு தலைவர் தோழர் அ. சவுந்தரராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா உள்ளிட்ட பல்துறை ஆளுமைகள் உரையாற்ற உள்ளனர்.
No comments:
Post a Comment