ஒன்றிய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் நிதி தொடர்பான கேள்விகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

ஒன்றிய நிதி அமைச்சரிடம் தமிழ்நாடு நிதி அமைச்சர் நிதி தொடர்பான கேள்விகள்

புதுடில்லி,அக்.3-தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமனிடம் கோரிக்கை வைத்ததாக தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித் துள்ளார்.

டில்லியில் ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாக ராஜன் சந்தித்தபின்னர் செய்தி யாளர்களிடம் அவர் கூறுகையில், தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை விரைந்து வழங்குமாறு கோரிக்கை வைத்தேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

ஜிஎஸ்டி கவுன்சில் விதிகள்படி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 3 மாதத்துக்கு ஒருமுறை நடத்தப் பட்ட வேண்டும். ஆகஸ்ட் மாதத் தில் மதுரையில் நடப்பதாக அறி விக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் முடிந்தும் இந்த கூட்டம் நடக்க வில்லை. இந்த கூட்டத்தை மது ரையில் நடத்துவது பற்றி விவா தித்தேன். இன்னும் தேதி குறிப்பிட வில்லை. ஆனாலும் விரைவில் அடுத்த கூட்டம் மதுரையில் உறுதி யாக நடக்கும்.  

மேலும் தமிழ்நாட்டின் பல திட்டங்கள், கணக்குகள் பற்றி   அதிகாரிகளிடமும் ஒன்றிய நிதி அமைச்சரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினேன். குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில் 2ஆவது கட்ட பணிக்காக ஜைக்கா, ஏடிபி, எஅய்பிஅய் நிறுவனங்களில் இருந்து பெறக்கூடிய கடனுக்கான அடிப்படை பத்திரங்கள் ஒன்றிய அமைச்சரவையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இதனை அவசரமாக ஒப்புதல் அளிக்க கோரினோம். இந்த விஷயத்தில் சில விளக்கங்களை கேட்டனர். அதனை 2 நாட்களுக்கு முன்பு கொடுத்து இருந்தோம். தற்போது இந்த மாத இறுதிக்குள் ஒப்புதல் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

இதன்மூலம் 2ஆம் கட்ட திட்டத்துக்கான கடனை விரைவாக பெற முடியும். ரூ.3,500 கோடி வட்டியில்லா கடன் ரூ.3,500 கோடி வட்டியில்லா கடன் அதோடு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு லட்சம் கோடி வரை 50 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்குவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதில் தமிழ் நாட்டின் பல துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் செய்யப்பட்டு இருந்தது. இதுவரைக்கும் நிதி எதுவும் வராத நிலையில் நேற்று 3,500 கோடி ரூபாய் வட்டியில்லா கடனை விடுவித்துள்ளனர். அதன் படி ஆப்டிக்கல் பைபர் கேபிள் திட்டத்துக்கு ரூ.194 கோடி, ஊரக நெடுஞ்சாலை துறைக்கு ரூ.3,263 கோடி எனவும் இதுமட்டுமின்றி பிற திட்டங்களுக்கு நிதி விடுவிக் கப்பட்டுள்ளது. 

ஒன்றிய அரசிடம் டேட்டா கேட்பு

மேலும் வருமானவரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்கள் கொடுக் கும்படி ஒன்றிய அரசிடம் கேட்டு இருந்தோம். தமிழ்நாட்டில் கடன் தள்ளுபடி, பிற திட்டங்களில் தமிழ்நாட்டு மக்கள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிந்து திட்டங்கள் செயல்படுத்த வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் கேட்டு இருந்தோம். இதுபற்றி பட்ஜெட்டிலேயே குறிப்பிட்டு இருந்தேன். வருமான வரித்துறையில் இருந்து கருநாடகத்துக்கு டேட்டா ரிலீஸ் செய்தனர். அதேபோல் தமிழ்நாட்டுக்கும் வருமான வரி மற்றும் இபிஎப்ஓ டேட்டாக்களை வழங்க கேட்டேன். தருவதாக கூறியுள்ளார். 

 மதுரையில் நைபர் (national institute of pharmacology and research)திட்டம் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. அதன் பிறகு இதில் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுபற்றி கேட்டபோது நைபர் திட்டம் அமலில் இல்லை என்றார். இதனால் நைமர் (National Institute of Medical Equipments research) திட்டத்தில் ஆய்வு மய் யத்தை மதுரைக்கு ஒதுக்க கோரிக்கை விடுத்துள்ளேன். மது ரையில் ஏய்ம்ஸ் வரும் நிலையில் இது பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.


No comments:

Post a Comment