புதுடில்லி,அக்.1- இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை விரைந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி கே.கே. ரமேஷ் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதி அனிருதா போஸ் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம். நட்ராஜ், இந்த ரிட் மனு தெளிவாக இல்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க கூடுதல் அவகாசம் தேவை என வாதிட்டார். மனுதாரர் சார்பில் ஆஜரான சி.ஆர். ஜெய சுகின், மீனவர்கள் இன்னும் மீட்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது என வாதிட்டார். அப்போது நீதிபதிகள், இலங்கையால் சிறை பிடிக்கப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை மீட்க எவ்வளவு நாட்கள் ஆகும் என ஒன்றிய அரசுக்கு கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு தெரிவிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 14-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment