சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பேட்டி

சென்னை, அக். 25- சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார். 

சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சென்னையில் சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க பல்வேறு கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் மொத்தம் 964கி.மீ. அளவுக்கு வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன. மழைநீர் வடிகால் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் கண்டிப்பாக தடுப்புகள் அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்புகளில் பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தால் 1913 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம். ஒரு ஆண்டில் 964 கிமீ மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி மூலமாக நடைபெறுகிறது. நீண்ட காலமாக தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த தடவை தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே நோக்கம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment