காஞ்சிபுரம், அக். 28-காஞ்சி புரம், செவிலிமேடு கிழக்கு பகுதியில், பழை மையான கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் அறநிலையத் துறை கட் டுப்பாட்டில் உள்ளது.
25.10.2022 அன்று இரவு, மர்ம நபர்கள் சிலர் கோவிலுக்குள் சென் றுள்ளனர். கோவிலில், பாதுகாப்பிற்காக எட்டு கண்காணிப்பு கேமராக் கள் பொருத்தப்பட்டுள் ளன. மதில் சுவரை தாண்டி உள்ளே சென்ற வர்கள், முதலில் கேம ராக்களை உடைத்து, பின் கோவில் மூலவர் அறை வெளிக் கதவு, உள் கதவு பூட்டுகளை உடைத் துள்ளனர். பூஜை பொருட் கள் வைத்திருக்கும் அறை யில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 2,500 ரூபாய் பணத்துடன் மதில் சுவரை தாண்டி, தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், மறு நாள் காலையில், வழக்கம் போல் கோவிலை பரா மரிக்கும் ராஜ் என்பவர், கதவை திறந்து பார்த்த போது, அனைத்து கதவு பூட்டுகளும் உடைக்கப் பட்டு இருப்பதை கண்டு, ஊர் மக்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
கோவில் செயல் அலு வலர் பூவழகி காவல் நிலையத்தில் அளித்த புகா ரின்பேரில் காஞ்சி தாலுகா காவல்நிலைய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment