சென்னை,அக்.25- திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் வசிக்கும் மலைவேடன் பழங்குடியின மக்களுக்கு மலை வேடன் பழங்குடியின இனச்சான்றிதழ் வழங்க தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணை யம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லி பாபு, மாநிலப் பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத்தலைவரும் சட்ட மன்ற மேனாள் உறுப்பினருமான டில்லி பாபுவின் 14.05.2018 தேதியிட்ட பத்தி ரிகை செய்தியின் அடிப்படையில் தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம் (SHRC case No. 3686 of 2018) தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது, இதில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், இயக்குநர், பழங்குடியினர் நலத் துறை, வருவாய் கோட்டாட்சியர், திண்டுக் கல் மற்றும் வருவாய் கோட் டாட்சியர், பழனி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப் பட்டனர். இந்த வழக்கில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் 14.10.2022 அன்று வழங்கி யுள்ள முக்கிய பரிந்துரைகள்.
1. இந்த வழக்கின் விசாரணையின் போது டில்லிபாபுவே நேரில் ஆஜராகி வாதிட்டு 03.02.2021 அன்று ஆணையத் திற்கு மனு ஒன்றை அளித்தார், திண்டுக்கல் மற்றும் பழனி வருவாய் கோட்டங்களில் இனச்சான்று கோரிய மனுக்கள் 10, 15 வருடங்களாக நிலு வையில் இருப்பதால், பள்ளி, கல்லூரி யில் சேரமுடியாமலும், அரசின் வேலை வாய்ப்பினை பெற முடியாமலும், மலை வேடன் இனச்சான்றிதழ் கோரி பல் வேறு போராட்டங்கள் நடத்தியும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை, இத னால் இம்மக்கள் சமூக ரீதியாகவும், பொரு ளாதர ரீதியாகவும் மிகவும் பின் தங்கிய நிலை யில் உள் ளனர். இந்திய நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும், இம்மக்கள் இனச்சான்றிதழ் பெறுவதற்கு எவ்வித முறையான ஏற்பாடும் இல்லாத கார ணத்தினால் இம்மக்கள் இனச்சான் றிதழ் பெற முடியாத நிலை உள்ளது மிகவும் வருத்தத்திற்கு உரியது.
எனவே, தமிழ்நாடு மனித உரிமை ஆணையம் தமிழ்நாடு அரசுக்கு கீழ் கண்ட பரிந்துரைகளை வழங்குகிறது.
i. பழங்குடியின மக்களுக்கு விரைந்து இனச்சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ் நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ii. பழங்குடியின மக்களுக்கு விரைந்து இனச்சான்றிதழ் வழங்குவதற்கு ஏதுவாக, வருவாய் கோட்டாட்சியர்/சார்-ஆட்சியர்களுக்கு பயிற்சி வகுப் புகள் நடத்தப்பட வேண்டும், மேலும் இனச்சான்றிதழ் விரைந்து வழங்குவ தற்கு, தேவையான உத்தரவுகளை வழங்கவேண்டும்.
iii. சந்தேகத்திற்குரிய நிகழ்வுகளில் விசாரித்து இனவரைவியல் அறிக்கை களை வழங்குவதற்கு போதுமான அளவில் மானிடவியல் ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும்.
iv.இனச்சான்றிதழ் மெய்த்தன்மை அறிவதற்கு அமைக்கப்பட்ட மாநில கூர் நோக்கு ஆணையம், மாவட்ட விழிக்கண் குழு விரைந்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு தேவையான உத்தரவுகளை வழங்க வேண்டும். மேற் கண்டவாறு தமிழ் நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவினை வழங்கி யுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
No comments:
Post a Comment