பாஜக ஆளும் அசாமில் லஞ்ச முறைகேடுகள் அம்பலம் அரசின் இணைச் செயலாளர் சிக்கினார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

பாஜக ஆளும் அசாமில் லஞ்ச முறைகேடுகள் அம்பலம் அரசின் இணைச் செயலாளர் சிக்கினார்

திப்ருகார், அக். 30- அசாம் மாநில அரசின் இணையச் செயலாளராக இருப்பவர் கிசான் குமார் சர்மா. இவர் செக்யூரிட்டி நிறுவன உரிமம் ஒன்றைப் புதுப்பிப்ப தற்காக லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து அந்த நிறுவனத்தின் உரிமை யாளர் ஊழல் தடுப்பு பிரிவு அதி காரிகளிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, ரூ. 90 ஆயிரத்தை கிசான் குமார் சர்மா லஞ்சமாக வாக்கும்போது அவரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். பின்னர் அவரது வீட்டிலும் அதிரடியாகச் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ. 49 லட்சம் பறிமுதல் செய் யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல் துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் னதாக கடந்த 21ஆம் தேதி திப்ருகார் மாவட்ட போக்குவரத்து அலுவல கத்தில் நடத்திய சோதனையில் ரூ.7 லட்சம் மற்றும் செல்லாத ரூ.87 ஆயி ரத்தையும் ஊழல் தடுப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

பா.ஜ.க. ஆளும் அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 10 முதல் அக்டோர் 19ம் தேதி வரை மட்டும் 64 உயர் அதி காரிகள் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அசாம் மாநிலத்தில் உயர் அதிகாரிகளே லஞ்சம் வாங்குவது அம்மாநிலத்தில் லஞ்சம் தலைவிரித்தாடுவதை காட்டுவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment