சென்னை, அக்.2 சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அமெ ரிக்காவில் வசிப்பவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த விலைமதிப்புள்ள சிலை களை காவல்துறையினர் மீட்டனர்.
சென்னை ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் விலை மதிப்புள்ள பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கும்படி சிலைகடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தலைமை இயக்குநர் ஜெயந்த்முரளி உத்தரவிட்டார்.
இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறை தலைவர் தினகரன், கண்காணிப்பாளர் ரவி ஆகியோர் மேற்பார்வையில், துணை கண்காணிப்பாளர் மோகன், முத்து ராஜா ஆகியோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நட வடிக்கையில் இறங்கினார்கள். சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப் பட்ட குறிப்பிட்ட வீட்டில் புகுந்து அதிரடி சோதனை நடத்தப்பட்டது. அந்த வீட்டில் யாரும் இல்லை. வீட்டுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவில் வசிக் கிறார். அந்த வீட்டில் இருந்து தொன்மை வாய்ந்த 7 வெண்கல சிலை களும், இரண்டு தஞ்சை ஓவியங்களும் கைப்பற்றப்பட்டன. 7 சிலைகளும் விலைமதிப்புள்ள சோழர் காலத்து சிலைகள் ஆகும். தஞ்சை ஓவியங்கள் இரண்டும், 15-ஆம் நூற்றாண்டு காலத்தவை.
இதுபற்றி அமெரிக்காவில் வசிக்கும் அந்த வீட்டு உரிமையாளரிடம் காவல் துறையினர் அலைபேசியில் பேசி விசா ரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், அந்த சிலைகள் தனது பெற்றோர் வைத்திருந்தது என்றும், அதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியதாக தெரிகிறது.
மேலும் அந்த சிலைகளுக்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல் லாததால் அவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் விவரம் வருமாறு:-
புத்தர் சிலைகள்-2, பார்வதி சிலைகள்-2, கிருஷ்ணர் சிலை-1 மற்றும் தாரா சிலை ஒன்று. இன்னொன்று பெயர் தெரியாத பெண் தெய்வத்தின் சிலை. இந்த சிலைகள் மற்றும் தஞ்சை ஓவியங்கள் எந்த கோவிலுக்கு சொந்தமானவை என்று விசாரணை நடப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment