வாசிங்டன், அக் 31- அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறு வனமான நாசா, புன்ன கையுடன் காணப்படும் ‘சூரியன்’ படத்தை வெளியிட்டுள்ளது. இது பேசும் பொருளாக மாறி உள் ளது
நாசா விண்வெளி ஆராய்ச்சிக்கு அனுப்பி யுள்ள ஒரு செயற்கைக் கோள் இந்த வார தொடக்கத்தில் சூரியனில் மகிழ்ச்சியான முக வடிவ மாகத் தோன்றிய படத் தைப் படம்பிடித்து அனுப்பி உள்ளது. அதா வது நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர் வேட்டரி சூரியனின் ‘சிரிக்கும்’ புகைப்படத்தை படம்பிடித்து அனுப்பி உள்ளது. இந்த படத்தை பார்த்த நாசா விஞ்ஞானி கள் வியப்படைந்து, அதை நாசாவின் டிவிட்டர் தளத்தில் பதிவேற்றி உள் ளனர்.
அதில், நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி சூரி யனை “படம்” பிடித்தது. "இந்த படத்தை பார்த்த போது, சூரியன் “புன்ன கையுடன்” காணப்பட்ட தாக தெரிகிறது, இது சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் சரியான இடங்களில் தற்செயலாக உருவாகி, நமது சூரியன் சிரிப்பது போல் காட்சி அளிக்கி றது. இரண்டு கரோனல் துளைகள் மகிழ்ச்சியான கண்கள் போல் தோன்று கின்றன. எப்போதும் சிறிது சிமிட்டுகிறது, மூன்றாவது துளை அதன் கீழே மய்யத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்குகிறது. புற ஊதா ஒளியில் பார்த் தால், சூரியனில் உள்ள இந்த இருண்ட திட்டுகள் கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின் றன, மேலும் அவை வேக மான சூரியக் காற்று விண் வெளியில் வெளியேறும் பகுதிகளாகும்" என நாசா விளக்கி உள்ளது.
No comments:
Post a Comment