நீதி கோரி வீதியில் இறங்கி போராடும் பெண்கள்மீது துப்பாக்கிச் சூடு
டெஹ்ரான், அக். 29- ஈரானில் மத வழக்கப்படி உடை அணிய வில்லை என்று கூறி கைது செய்யப்பட்ட மஹ்சா அமினி என்ற 22 வயது பெண்ணின் மரணத்திற்கு நீதி கேட்டு நடந்து வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. குர் தீஷ் பகுதியைச் சேர்ந்த ஈரானி யப் பெண்ணான அமினி செப் டம்பர் 16 ஆம் தேதி உயிரி ழந்தார்.
மதப்பழக்கங்களைக் கண்காணிக்கும் காவல்துறை யால் கைது செய்யப்பட்ட மூன் றாவது நாளில் அவர் மரண மடைந்தார். பெண்களுக்கு இஸ்லாமிய மதம் விதிக்கும் உடையை அவர் அணிய வில்லை என்ற காரணத்திற் காகக் கைது செய்யப்பட்டிருந் தார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அவரது உடலை மறுபரிசோதனை செய்ய வேண்டும் என்று கோரி ஈரானியப் பெண்கள் ஆர்ப் பாட்டங்களை நடத்தி வரு கிறார்கள்.
அமினி மறைந்து 40 நாட்கள் ஆன நிலையில் அதை நினைவு கூரும் வகையில் ஊர் வலம் நடந்தது. அவர் நினை விடத்தில் மரியாதை செலுத்து வதற்காகக் கூடிய மக்கள் அதை கண்டனப் பேரணியாக மாற்றினார்கள். ஆயிரக்கணக் கான மக்கள் இதில் பங்கேற்ற னர். இவ்வளவு எண்ணிக்கை யில் மக்கள் கலந்து கொள் வார்கள் என்று எதிர்பார்க்காத காவல்துறையினர் கூட்டத் தைக் கலைக்க முயற்சித்தனர்.
ஒரு கட்டத்தில் துப்பாக் கிச்சூடும் நடத்தினார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியாக வில்லை. காவல்துறையினரை நோக்கி போராட்டக்காரர்கள் தாக்குதல்களை நடத்தியதாக காவல்துறையினர் தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையில் மோதல் நடந்ததாக ஈரானின் இஸ்னா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மஹ்சா அமினியின் நினை விடத்திற்கு வந்த சிலர் தாக் குதல் நடத்தியதாகவும், அவர் களைக் காவல்துறையினர் கலைத்துவிட்டதாகவும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது. அந்தச் செய்தியின்படி 10 ஆயிரம் பேர் குழுமியிருக்கிறார்கள். ஆனால் துப்பாக்கிச்சூடு பற்றி இந்தச் செய்தி எதையும் குறிப்பிட வில்லை.
தடைகளை மீறிய மக்கள்
மேற்கு குர்திஸ்தான் மாகா ணத்தின் சாகேஸ் நகரில் உள்ள மஹ்சா அமினி யின் 40ஆவது நாள் நினைவு ஊர்வலம் நடக் கும் என்று காவல்துறை எதிர் பார்த்தே இருந்தது. ஆனால், மக்களைப் பெருமளவில் வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருந் தார்கள். ஆனால் அனைத்தை யும் மீறி ஆயிரக் கணக்கான மக்கள் சாகேஸ் நகருக்குள் நுழைந்தனர். அரசுக்கும், காவல் துறைக்கும் எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
கால்பந்து வீரர் கைது?
அமினிக்கு மரியாதை செலுத் தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பன்னட்டு அளவில் பிரபலமான வரும், ஈரானுக்கு பன்னாட்டு அளவில் பல வெற்றிகளை ஈட்டித்தந்த கால் பந்து வீரருமான அலிடேய் சாகேஸ் நகருக்கு வந்தார். ஏற்கெனவே அமினியின் மர ணம் தொடர்பான அவரது டிவிட்டர் பதிவு பன்னாட்ட ளவில் கவனத்தை ஈர்த்தது.
அவர் அரசு விருந்தினர் மாளிகைக்கு காவல்துறையின ரால் அழைத்துச் செல்லப்பட்ட தாக ஈரான் செய்தி நிறுவனங் கள் கூறுகின்றன. சில மேற்கத் திய ஊடகங்கள் அவர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன.
டெஹ்ரான் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாண வர்கள் போராட்டத்தில் குதித் துள்ளனர். 40ஆவது நினைவு நாளையொட்டி கல்வி நிலை யங்களில் இருந்து வெளியேறித் தங்கள் எதிர்ப்பை மாணவர்கள் காட்டியிருக்கிறார்கள். மஹ்சா அமினியின் மரணம் நிகழ்ந்து அய்ந்து வாரங்கள் ஆகியும் போராட்டங்களின் வீச்சு குறையவில்லை. மாறாக, 40ஆவது நினைவு நாளன்று தீவிரமாகியுள்ளது. இந்தப் போராட்டங்களைப் பயன் படுத்தி ஈரானில் குழப்பங்களை விளைவிக்க மேற்கத்திய நாடு கள் முனைந்துள்ளன என்ப தும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால், மேற்கத்திய ஊட கங்கள் சிலவற்றிற்கு ஈரான் தடை விதித்துள்ளது. குறிப் பாக சில ஊடகவியலாளர்களை செய்தி சேகரிக்க ஈரானுக்குள் நுழைய அனுமதியும் மறுத் திருக்கிறார்கள்.
No comments:
Post a Comment