சென்னை, அக்.2 தனியார் வானொ லியில் ஒலிபரப்பாகிய ‘ஸ்பாட்லைட்' நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமா வளவன் கலந்து கொண்டு பேசினார்
வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது,கலைஞர், ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழ்நிலையில் சமூக நீதி குரல் ஓங்கி ஒலித்த தமிழ் நிலத்தில் மத அடிப்படையிலான குரல் ஒலிக்கத் தொடங்கி இருப்பது ஆழ்ந்த வருத் தத்தை தருகிறது என்றார்.
ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு விதித்த தடையை வரவேற்பதாகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் எந்த எல்லைக்கும் போவதற்கு தயங்காத வர்கள். அவர்கள் சிறுபான்மை மக்கள் மீது வெறுப்பு அரசியலை விதைப் பதால் அவர்களது அணிவகுப்பை எதிர்க்கிறோம் என்றார்.
மேலும், சமகால அரசியல் நிகழ் வுகள் குறித்து, நிகழ்ச்சி தொகுப்பாளரின் கேள்விகளுக்கு விரிவாகவும், விளக்க மாகவும் பதில் அளித்துள்ளார்.
No comments:
Post a Comment