கணினியில் பணி - கவனியுங்கள் இனி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 31, 2022

கணினியில் பணி - கவனியுங்கள் இனி!

கணினி, மடிக்கணினி, தொலைப்பேசி போன்ற மின்னணுத் திரைச் சாதனங்களு டன் செலவிடும் நேரம் அதிகரித்துவிட்டது. அப்படி நீண்ட நேரம் மின்னணுத் திரையை பார்த்தபடி அமர்ந்திருப்பது கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். கணினி, மடிக்கணினி, அல்லது கைப்பேசி முன்பு ஒவ்வொரு நாளும் நிறைய நேரத்தை செலவிடுகிறீர்கள் என்றால், ‘கணினி விசன் சிண்ட்ரோம்’ எனப்படும் கணினி பார்வை நோய்க்குறி (சி.வி.எஸ்) பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும். நீண்ட நேரம் திரையைப் பார்க்கும்போதும், தட்டச்சு செய்யும்போதும், ஆழ்ந்த கவனத்துடன் வேலை செய்யும்போதும் கண்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுக்க வேண்டியிருக்கும். அப்போது கண் கூசுதல், கண் எரிச்சல், சோர்வு போன்ற அறிகுறிகள் வெளிப்பட தொடங்கும்.

‘கணினி விஷன் சிண்ட்ரோம் பெரிய அளவில் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தாது. ஆனால் சரியான தற்காப்பு நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கண்களுக்கு பாதிப்பு நேருவதை தவிர்க்கமுடியாது. திரையைப் பார்க்கும்போது கண்களுக்கும், கணினி சாதனங்களுக்கும் இடையே போதுமான இடைவெளி இருப்பதை உறுதி செய்வது, அரை மணி நேரத்திற்கு ஒருமுறை திரையை பார்க்காமல் சில விநாடிகள் தவிர்ப்பது, ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் இடையே பதினைந்து நிமி டங்கள் இடைவெளி எடுப்பது போன்ற விஷயங்களை மேற்கொள்வது நல்லது’’ என்பது கண் மருத்துவர்களின் ஆலோ சனையாக இருக்கிறது. கணினிகள் கண் பார்வை திறனை எவ்வாறு பாதிக்கின்றன என்பது நீண்ட காலமாக விவாதிக்கப்படும் கேள்வியாக இருக்கிறது. கணினி முன்பு அமர்ந்திருக்கும்போது கண்களின் கவ னம் முழுவதும் திரை மீதுதான் படிந்தி ருக்கும். அப்படி நிலையாக கவனம் குவி யும்போது திரையில் பார்க்கும், செயல் படுத்தும் விஷயங்கள் எல்லாம் மூளைக்கு தகவல்களாக பரிமாறப்பட்டுக் கொண்டே இருக்கும்.

இந்த செயல்முறைக்கு கண் தசை களின் பங்களிப்பு அதிகம் தேவைப்படும். மேலும் கண்களின் கவனம் திரையில் படர்வதன் காரணமாக கண் சிமிட்டும் செயல்முறையும் குறைந்து போய்விடும். திரையில் அதிக ஒளி வெளிப்படும்போது கண்கள் கூசுதல், மங்கலான பார்வை போன்ற பாதிப்புகளும் உண்டாகக்கூடும். கணினி விஷன் சிண்ட்ரோம் பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்பு சில அறிகுறி களை வெளிப்படுத்தும். தலைவலி, கண் களில் அழுத்தம், கண் வறட்சி அடைதல், கண்களில் எரிச்சல், அரிப்பு ஏற்படுதல், கண்கள் சிவப்பு நிறத்திற்கு மாறுதல், கண் சோர்வு, இரட்டை பார்வை, கழுத்துவலி, முதுகுவலி போன்ற பிரச்சினைகள் உண் டாகும்.

சிறந்த வழிமுறைகளைப் பயன்படுத்தி, மருத்துவ ஆலோசனைகள் மூலம், கணி னியில் பணி செய்வோம். கண்களையும், மூளை செயல்பாட்டையும் காப்போம்.

No comments:

Post a Comment