கீழப்பாவூர், அக். 3- கீழப்பாவூ ரில் 18.9.2022 அன்று பாண்டியனார் திடலில் திராவிடர் கழக இளைஞ ரணித் திராவிட மாணவர் கழகம் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி இயக்கங்கள் இணைந்து நடத்திய தந்தை பெரியார் 144 ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அ.வ.சவுந்தர பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல மாண வர் கழக செயலாளர் சு.இனியன் அனைவரை யும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்வினை நெல்லை மண்டல செய லாளர் அய்.இராமச்சந் திரன் தொகுத்து வழங் கினார். இக்கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் வழக்குரைஞர் த.வீரன், கீழப்பாவூர் நகர தலைவர் மு.இராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் பி.பொன்ராஜ்,திமுக நகரச் செயலாளர்
ரெ.ஜெகதீசன், திமுக மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் கா.இராஜா மணி ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
தென் மண்டல பிரச்சார குழு செயலாளர் சீ.டேவிட் செல்லதுரை, கீழப்பாவூர் பேரூராட்சி மன்ற தலைவர் ராஜன், மாவட்ட கவுன்சிலர் இரா.சாக்ரடீஸ், தென் காசி மாவட்ட மகளிர் அணி தலைவர் மருத்து வர் கவுதமி தமிழரசன், திமுக மாவட்ட மாணவர் கழக துணை அமைப்பா ளர் அரவிந்த் மணிராஜ், திமுக மாவட்ட கழகப் பேச்சாளர் சகாயராஜ் ,ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வில் கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் கலந்து கொண்டு சிறப்புரையாற் றினார். மேலும் கீழப்பா வூர் பேரூர் திமுக துணைச் செயலாளர் இல.அறிவழ கன் ஒன்றிய கவுன்சிலர் சு.ஜான்சி ஜெயமலர், ஆதித்தமிழர் பேரவை யின் மாவட்ட செயலா ளர் வை.கலிவர்ணன் மற் றும் கீழப்பாவூர், மேல மெஞ்ஞானபுரம் கழக குடும்பங்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித் தனர். இந்த கூட்டத்தில் மேல மெஞ்ஞானபுரம் தோழர் களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிகழ்வின் இறுதியில் தென்காசி மாவட்ட மாணவர் கழக தலைவர் தே.ம.அமுதன் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment