கனடா நாட்டில் டொராண்டோ பன்னாட்டு சமூகநீதி மாநாடு : ஒப்பற்ற தலைவர் ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

கனடா நாட்டில் டொராண்டோ பன்னாட்டு சமூகநீதி மாநாடு : ஒப்பற்ற தலைவர் !

"பெரியார் பன்னாட்டமைப்பின் மாநாட்டு உழைப்பாளர்கள் கூட்டம் இந்திய நேரப்படி (6.10.2022) அதிகாலை 6.30 மணியளவில் காணொலி நடக்கின்றது. அதில் அனைவர்க் கும் நன்றி சொல்லி மாநாட்டைப் பற்றிப் பேசுவோம்" என்று தமிழர் தலைவர் ஆசிரியரிடம்  சொன்னேன். "நான் வந்து நன்றி சொல்வேன்" என்றார்.  ஆசிரியரிடம் "நேரம் விடியற்காலை 6:30 மணி உங்கள் நேரம் என்று" சொன்னேன். "அதை பற்றி என்ன? நான் திருச்சிக்கு விடியற்காலையில் வந்து விடுவேன், அங்கிருந்து பேசுகின்றேன்" என்றார் .நான் "நீங்கள் ஓய்வெடுக்க வேண்டும்" என்று சொல்லிப் பார்த்தேன். "நான் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டும்" என்று சொல்லிவிட்டார்!

 மாநாட்டில் மார்ட்டின் லூதர் கிங் , பெரியார் பற்றி உரையாடிய பிஞ்சுகள் இளங்கதிர் இளமாறன், நிக்கில் முனியப்பன் இருவரையும் நன்கு பாராட்டினார். உற்சாகப் படுத்தி மேலும் நன்கு செயல் படத்  தூண்டினார், அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளைத் தந்து விட்டார் .

கல்லூரி மாணவர் அமரன்   'திருக்குறளும் சமூகநீதியும்' என்ற தலைப்பில் மாநாட்டில் பேசியவர் . அவரையும் உற்சாகப் படுத்தி மேலே என்ன செய்யப் போகின்றீர்கள். மேலும் பேசுங்கள், எழுதுங்கள் என்று ஊக்க மூட்டினார். கனடாவில் வாழும் திருமகள் இறைவி குடும்பத்துப் புயல், மற்றும் சித் தார்த்தன்   மகளும், கோ. கருணாநிதி  மரு மகளுமான அமிர்தா, அறிவழகன் கருணாநிதி அவர்களும் மாநாட்டில் வந்து உழைத்தனர். அவர்களைப் பாராட்டி நலம் விசாரித்து மகிழ்ச்சி ஊட்டினார் . அவர்கள் அகமகிழ்ந்தனர் . குடும்ப உறவுகள் போல் கொஞ்சியது அனைவர்க்கும் மகிழ்ச்சி .

அடுத்து பெருங் கொடையாளர் மணவாளன் நடராசன், ரேணுகா மணவாளன் இவர்களை நலம் கேட்டு மகிழ்ந்தார் . மும்பையில் வாழும் மூன்றாம் தலைமுறை தோழர் கங்காநிதி   சிவபாண்டியன் அந்தக் காலத்தில் தந்தை பெரியாருடன் எடுத்துக் கொண்ட அவர்கள் குடும்பப் படத்தைக் காட்டி மகிழ்ந்தார். டெட்ராயிட் நகரில் வசிப்பவர். ஆசிரியருடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சியடைந்தார் .பேராசிரியர்கள்  இலக் குவன் தமிழ், அரசு செல்லையா மாநாட்டுச் சிறப்பு பற்றி பேசினார்கள் . தொண்டர்கள் நியூ செர்சி இளமாறன், பிரபு , சிகாகோ ரவி வைத்தியலிங்கம், வினுப்பிரியா அவர்களது பெற்றோர், குழந்தைகள் (பிரபாகரன் "தொண்டு செய்து பழுத்த பழம்" பாடினார்), விஜய் சாந்தலிங்கம் , சரவணகுமார் மணியன், தமிழ்மணி ஆகியோர் குடும்ப உறவுகளாகப் பேசி,  ஆசிரியர் வராதது மிக்க வருத்தம் என்று தெரிவித்தனர். டெலவேர் துரைக் கண்ணன் சுந்தரக்கண்ணன் பேசினார். ஆசிரியர் அவரது தந்தையாரை விசாரித்தார்.   மதுரை நேரு அவர்களும் மாநாட்டு உழைப்பாளிகள் குழுவில் பங்களித்தவர் . அனைத்துச் சிறப்புகளையும் எடுத்துரைத்தார் .வர்ஜினியாவில் உள்ள அறிவுப்பொன்னி, எழில் வடிவம், குழந்தைகள் இலக்கியா, இனியா பேசி மகிழ்ந்தனர். கேரி வட கரோ லினாவிலிருந்து குடும்பத்துடன் வந்திருந்த குழு உறுப்பினர் மோகன் வைரக்கண்ணு அகமகிழ்ந்து வாழ்த்தினார். ஆசிரியர் அவரது உறவினர்களை நலம் விசாரித்தார்.

பொருளாளர் அருள்செல்வி பாலகுரு, மருத்துவர் சரோ. இளங்கோவன் ஆகி யோரது  கடும் உழைப்பையும் பாராட்டினார்.

ஆசிரியர்  அவர்கள் குடும்பத் தலை வராக அனைவரையும், அவர்களது உறவினர்களையும் நலம் கேட்டுப் பேசியது உள்ளத்தைத் தொட்டது . தொண்டர்களுக்கு அவர் தரும் மதிப்பும், மரியாதையும் காட்டும் அன்பும் அற்புதம்.  கழகப் பொருளாளர் வீ.குமரேசன் ,  பிரின்சு என்னாரெசு  பெரியார் ஆகியோர் மகிழ்ச்சியுடன் மாநாட்டு ஏற் பாடுகள்  - தமிழரல்லாதார் பங்கேற்பு பற்றி மகிழ்ந்து பேசினார்கள். விருந்தோம்பல் உச்சம் என்றனர். ஈழத்து  முரளீதரன், டெண்டன் துரைராசு, சிவன் இளங்கோ இவர்களைப் பாராட்டினோம் . கண்ணபிரான் ரவிசங்கரின் கடும் உழைப்பில் ஒவ்வொன்றும் சரி பார்க் கப்பட்டு நிகழ்ச்சி அருமையாக நடந்தது. மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உணர்ச்சிப் பூர்வ உரை அனைவரையும் கவர்ந்தது. "நக்க லிட்ஸ் குழுவினர் இந்த மாநாட்டிற்காகவே சிறப்பாகத் தயாரித்த "ஜாதி சூழ் உலகம்" மிகவும் பாரட்டப்பட்டது . கனடாவில் இருக் கும் பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்ட தோழர்களது நிகழ்ச்சி அருமையாக ஆசிப் அவர்களால் தோழர்களின்  ஒத்துழைப்போடு நடை பெற்றதை  ஆசிரியர் பாராட்டினார்.

தமிழர் தலைவர் அவர்களின் ஒரு கூட்டு முயற்சியின் அற்புதமான வெற்றி என்றும், மேன் மேலும்  இணையத்திலும், மற்ற வகைகளிலும் செய்ய வேண்டிய செயல்கள் பற்றியும் அறிவுரை கூறினார்.

நான் இதை முன்னரே அறிவிக்காமல் ஆசிரியர் இடையில்   வியப்புற வந்தது அனைவர்க்கும் பெரும் மகிழ்ச்சியைத் தந்தது.

நாம் கொடுத்து வைத்தவர்கள். இப்படி ஒரு தலைமையின் கீழ் உழைப்பது மிகவும் உற்சாகமானது .

இந்த ஒப்பற்ற தலைவருடன் பயணிப் போம் .

வெற்றி நமதே !

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு .




No comments:

Post a Comment