உங்கள் தொகுதியில் முதலைமைச்சர் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் ஆய்வுக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

உங்கள் தொகுதியில் முதலைமைச்சர் அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் ஈரோட்டில் ஆய்வுக் கூட்டம்

ஈரோடு, அக்.29  அமைச்சர் சு.முத்து சாமி தலைமையில் நடந்த உங்கள் தொகுதியில் முதலமைச்சர்திட்ட ஆய்வுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர்என்ற திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர்கள் தலா 10 கோரிக்கைகளை அளிக்க தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அறிவித் திருந்தார்.  அதன்படி ஈரோடு மாவட் டத்தில் உள்ள 8 தொகுதிகளுக்கும் தேவையான கோரிக்கைகளை அமைச் சர் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப் பினர்களும், மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணியிடம் வழங்கி உள்ளனர். இதுதொடர்பான அனைத்து துறை அதிகாரிகள் குழு கூட்டம் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் (27.10.2022) நடந்தது.  -சட்ட மன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு தமிழ்நாடு வீட்டுவசதித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணனுண்ணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மேனாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். (கோபி), சட்டமன்ற உறுப்பினர்கள் அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாச்சலம், பெருந் துறை எஸ்.ஜெயக்குமார், பவானிசாகர் எ.பண் ணாரி, மொடக்குறிச்சி டாக்டர் சி.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை திட்ட இயக் குநருமான லி.மதுபாலன் கூட்ட நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார். சாலைகள் சீரமைப்பு கூட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, பேசியதாவது:- சட்டமன்ற உறுப்பினர்களின் 10 கோரிக்கை களையும் விரைவாக நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. பாதாள சாக் கடை திட்டம், குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகள், 5 ஆண்டுகள் முடிவடைந்த சாலைகள் என வார்டு வாரியாக மாநகராட்சி அதிகாரிகள் பட்டியலிட்டு வழங்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முடி வடையும். அதற்குள் இந்த திட்டங் களுக்கான நிதி பெற்று நிறைவேற்றலாம். ஈரோட்டில், 3 ஆயிரம் பேருக்கு பட்டா பெறுவதில் உள்ள சிக்கலை தீர்க்க, அரசின் பரிசீலனையில் உள்ளது. மாநகராட்சியின் விரிவாக்க பகுதிக்கு ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் கொண்டு செல்ல, ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் உள்ள, 52 ஏக்கர் நிலத்தில் விளையாட்டு மைதானம், பிற பணிகள் செய்ய பயன்படுத்தப்படும். சென்னிமலை தாலுகா பெருந்துறை தாலுகாவை பிரித்து, சென்னிமலையை புதிய தாலுகாவாக உருவாக்க அரசுக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது. புஞ்சைபுளியம்பட்டியில் தீயணைப்பு நிலையம் அமைக்க அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது. பவானி அம்மாபாளையம் உயர்மட்ட பாலம் அமைக்க, அரசின் அனுமதிக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி கூறினார். 

No comments:

Post a Comment