கோவை, அக். 30- கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகள் சீரமைப்புப் பணிகளை மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். ராமநாதபுரம் 80 அடி சாலையில் சாலை சீரமைப்பு பணிகளை துவக்கி வைத்தார். அதன்பின், செய்தியா ளர்கள் சந்திப்பில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது:-
கோவை கார் வெடிப்பு நிகழ்வு நடந்த பின்னர் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இவ்விவ காரத்தில் மிக விரைவாக நட வடிக்கை எடுத்ததாக தொழில் முனை வோர் முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்தனர். பா.ஜ. க.வினர் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது எடுபடாது. கோவை காவல்துறை இவ் வழக்கை மிகத் திறமையாக கையாண்டுள்ளது. கட்சி தலை மைக்கு தெரியாமல் பா.ஜ.க. மாவட்ட நிர்வாகிகள் எப்படி முழு அடைப்பு அறிவிக்க முடியும்? கட் சியை சரியாக வழிநடத்தும் தலைவர் என்றால் ஏன் ஒப்புதல் இல்லாமல் முழு அடைப்பு அறிவித்தார்கள் என கேட்டிருக்க வேண்டும். நீதி மன்றத்தில் தனக்கு தொடர் பில்லை என்பது முறையானது அல்ல. அக்கட்சியினருக்குள் ஒரு முடிவுக்கு வரவேண்டும். பா.ஜ.க. மாநிலத் தலைவர் ஒரு அரசியல் கோமாளி. அரசியல் கோமாளி தொடர்பான கேள்வி களை என்னிடம் கேட்க வேண் டாம். கட்சி தலைமைக்கு தெரி யாமல் மாவட்ட நிர்வாகிகள் முழு அடைப்பு என எப்படி சொல்ல முடியும்? கட்சித் தலை வர் என்ன செய்யவேண்டும்? கட்சி நிர்வாகிகளிடம் பேசி முழு அடைப்பை ரத்து செய்ய வேண்டும் என சொல்லியிருக்க வேண்டும். ஒரு இயக்கத்தை வளர்க்க மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். ஊட கங்கள் மூலம் வளர்க்க நினைப் பது மக்கள் ஏற்காத நடைமுறை. என் மீதான தனிப்பட்ட தாக்கு தல்களை என்னை இன்னும் மேம் படுத்துவதாக எடுத்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment