சென்னை, அக். 30- ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சி கள் வலியுறுத்தி உள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச்செய லாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
''கோவை, கார் வெடிப்பு சம்பவத்தை சுயநல அரசியலுக்காக பயன் படுத்திக்கொள்ளும் பா.ஜ.க.வின் முயற்சிக ளுக்கு ஆளுநர் துணை போவது வன்மையான கண்டனத்திற்குரியது. கோவையில் ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆளுநர், காவல்துறையின் துரிதமான செயல் பாட்டை பாராட்டி விட்டு, என்.அய்.ஏ. விசா ரணை தாமதப்படுத்தப் பட்டதாகவும், அதனால் ஆதாரங்கள் அழிய வாய்ப்புள்ளது என்றும் கற்பனை சரடுகளை அள்ளி விட்டுள்ளார். மாநில அரசாங்கத்திற்கு உள்நோக்கம் கற்பிக்க முயற்சி செய்திருக்கிறார். எனவே, ஆளுநர் ஆர். என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, கோவை, கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தாமதம் செய்ததாக புகார் கூறியுள்ளார். கார் சிலிண்டர் வெடிப்பில் மரணமடைந்த ஜமேஷ் முபினிடம் 2019ஆ-ம் ஆண்டு என்.அய்.ஏ. விசாரணை அதிகாரிகள் விசாரித்துள் ளனர்? என்.அய்.ஏ. கண் காணிப்பு எல்லைக்குள் இருந்த அவர் எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது என்ற கேள் விக்கு ஒன்றிய உள்துறை அமைச்சகம் தான் விளக் கம் கூற வேண்டும். இது போன்ற கேள்விகளை கருத்தில் கொள்ளாமல், அரசமைப்பு அதி காரம் கொண்ட, உயர் பொறுப்பில் இருக்கும் ஆளுநர் பொறுப்பற்ற முறையில் பேசி, மலிவான அரசியலில் ஈடுபட்டிருப் பதை இந்திய கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண் டிக்கிறது'' என்று தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment