கடலூர், அக்.29 சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்றிய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் ஒன்றிய, மாநில அரசால் அங்கீ கரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ- மாணவிகளுக்கு பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை ஒன்றிய அரசின் www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (NSP) ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 31.10.2022 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதியான மாணவ, மாணவிகள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்திற்கு 31.10.2022 வரை மேற்படி இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பாக இந்திய அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டி நெறிமுறைகள் http:www.minorityaffairs.gov.in/schemes என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னை குடிநீர் வாரியத்தில் புகார் செய்ய புதிய திட்டம்
சென்னை, அக்.29 சென்னை மக்களுக்கு தேவையான சுகாதாரமான குடிநீரை வழங்கும் பணியை சென்னை குடிநீர் வாரியம் செய்து வருகிறது. பல்வேறு குடிநீர் ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் குடிநீரை தேவையான அளவு பகிர்ந்து அளித்து வருகிறது. மேலும் சென்னையில் கழிவுநீரை அகற்றும் பணியையும் செய்து வருகிறது. இதற்கான சேவைகளில் நுகர்வோர்களுக்கு ஏற்படக்கூடிய குறைகளுக்கு தீர்வு காணவும், வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் நுகர்வோர்களிடம் இருந்து புகார்கள் பெறும் வசதிகளை செய்துள்ளது. இதன் மூலம் புகார்தாரர் களுக்கு உடனுக்குடன் பதில் தருவதுடன், அவர்களின் பிரச்சினைகளை தீர்க்க தேவையான நடவடிக்கை களையும் எடுத்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த திட்டங்கள் மூலம் நுகர்வோர்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வு கிடைக்கிறது. சென்னைக் குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவல கத்தில் உள்ள புகார் பிரிவில் 24 மணி நேரமும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டு அவைகள் உடனுக் குடன் சம்பந்தப்பட்ட பணிமனைப் பொறியாளர்களுக்கு அலைபேசி மூலமாக அனுப்பப்படுகின்றது. வலைதளம் சார்ந்த இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டு நுகர்வோரிடமிருந்து கணினி வாயிலாகவும், தொலை பேசி வாயிலாகவும் புகார்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்படுகிறது. புகார்கள் பெறப்பட்ட பிறகு, ஒரு பிரத்யேக புகார் எண் தாமாக உருவாக்கப்பட்டு உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலமாக நுகர்வோருக்கும், பணிமனைப் பொறியாளருக்கும் அனுப்பப்படுகிறது. நுகர்வோர் தங்களது புகார்களை எவ்வித தடையுமின்றி பதிவு செய்வதற்காக புகார் பிரிவில் தொலைப்பேசி எண்கள் 044- 45674567, 14420, 1916 (கட்டணமில்லா எண்) 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. புகார்கள் பதிவு செய்யப்பட்டு உடனுக்குடன் சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகம், பணிமனை அலுவலகம், முதுநிலை கணக்கு அலுவலருக்கும் கணினி மூலமாக அனுப்பி வைக்கப்படுகிறது.
கைபேசி பயன்பாட்டின் மூலமாக புகார் பதிவு செய்யும் வசதியும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டுள் ளதால், புகாரில் தெரிவிக்கப்பட்ட பிரச்சினையின் சரியான கோணம் மற்றும் இடத்தை துல்லியமாக அடையாளம் காணவும், உடனடியாக உரிய நட வடிக்கை எடுக்கப்படுகிறது.
மேலும், சென்னை குடிநீர் வாரிய இணையதளத்தில் அனைத்து துறை அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரிகள் வெளியிடப்பட்டுள்ளது. கள அதிகாரிகளின் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்ட தகவல்கள் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு மின்னஞ்சல் மூலமாக பதில் தெரிவிக்கப்படுகிறது. இதுதவிர, பொதுமக்க ளுடைய குறைகளை நேரடியாக கேட்கும் விதமாக குறை தீர்க்கும் கூட்டங்கள் எல்லா மாதங்களிலும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை 15 பகுதி அலுவலகங்களிலும் நடத்தப்படுகிறது. அங்கு பெறப்பட்ட மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கண்காணிக்கப்படு கிறது. குறைதீர்க்கும் பணியில் கைபேசி செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், நுகர்வோர்கள் தங்கள் குறைகளை வாரிய அதிகாரிகளுக்கு எந்த நேரத்திலும் விரைவாகவும், வசதியாகவும் கைப்பேசி மூலம் தெரிவிக்கலாம். நுகர்வோர்கள் தங்களது குறைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் நிலவரத்தை அவ்வப்போது தெரிந்து கொள்ள இந்த செயலி உதவுகிறது.
No comments:
Post a Comment