நூல்: பெரியார் உதிர்த்த முத்துக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

நூல்: பெரியார் உதிர்த்த முத்துக்கள்

ஆசிரியர்: முல்லை பி.எஸ். முத்தையா

வெளியீடு: முல்லை பதிப்பகம்

விலை: ரூ.60         பக்கங்கள்: 96

“பெரியார் உதிர்த்த முத்துக்கள்’’ என்னும் தலைப்பில் முல்லை பி.எல். முத்தையா அவர்கள் தந்தை பெரியார் அவர் களின் நகைச்சுவை, சீர்திருத்தம், மூடப்பழக்கம், அறிவியல்  சார்ந்த கருத்துகளை 89 நிகழ்ச்சிகளில் பேசியவற்றின் மூலம் தொகுத்துக் கொடுத்துள்ளார். 89 நிகழ்வுகளைப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

“எதிர்ப்பை ஏற்படுத்தும் சமுதாயப்பணி’’ என்னும் தலைப்பில், ஒரு சமயம் பெரியார் அவர்கள் “மற்றவர்கள் சுலபமாகச் செய்ய முன்வராத பணியால் இந்த நாட்டிலே பெருமைப்பட முடியாது. “அரசியல் பணி செய்தால், அதற்கு உடனடியாகப் பலன் கிடைக்கும். பொருளாதாரப் பணியிலே ஏற்றம் கிடைத்தால் அவனுக்கு அந்தஸ்து கிடைக்கும்.’’ “ஆனால், சமுதாயப் பணி இருக்கிறதே அது துப்புரவுப் பணி போன்றது.’’

“அது கழிவு நீரை எல்லாம் எப்படி தூக்கிக் கொண்டு போகிறார்களோ அப்படிப்பட்ட பணி போன்றது சமுதாயப்பணி’’  “அவர்கள்மீது சேற்றை வாரி வீசுவார்கள்; அவர்கள்மீது எதிர்ப்பை அள்ளிக்கொட்டுவார்கள். எதிர்நீச்சல் போட வேண்டிய அவசியம் இருக்கும். இதை எல்லாம் எதிர்பார்த்தே செய்கிறேன். இந்தச் சமுதாயப் பணியை’’ என்று பெரியார் கூறினார். இது போன்ற சமுதாயப் பணிகளை உற்சாகத்துடன், ஆர்வத்துடன் தள்ளாத நிலையிலும், பிறர் உதவியின்றி நடமாட முடியாத முதுமையிலும் பொதுக் கூட்டங்களுக்குப் போய் தனது கருத்தினைப் பதிவு செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் பெரியார்.

இதுபோன்ற சிறிய கருத்துகளைத் தொகுத்து மக்களின் பதிவுகளையும் தர முல்லை முத்தையா போன்றவர்களால் தான் முடியும் என்பதை நிறுவியுள்ளார் நூலாசிரியர்.

No comments:

Post a Comment