மதுரை, அக்.7- ஒன்றிய அரசு, மாநிலங்களில் செயல் படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சமாக செயல்படுகின்றது. இமாச்சல பிரதேசம் மாநிலத்தில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கப்பட் டுள்ளது. ஆனால் அதே நாளில் அறிவிக்கப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் ஏதும் முறையாக மேற்கொள் ளப்படாத நிலையே உள்ளது. மதுரை மாவட்டத்தில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. சட்ட அமைப்பு திருத்தம் மற்றும் மரபுகள்படி 3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம், இது வரை நடைபெறவில்லை. இந்த கூட்டத்தை விரைந்து நடத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
Friday, October 7, 2022
ஜி.எஸ்.டி. கூட்டத்தை நடத்தாதது ஏன்? அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேள்வி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment