குழந்தைகளை பள்ளிகளுக்கு ஆட்டோவில் அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

குழந்தைகளை பள்ளிகளுக்கு ஆட்டோவில் அனுப்புவது ஏற்கத்தக்கதல்ல உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை, அக். 30- பள்ளிகளுக்கு குழந்தைகளை ஆட் டோக்களில் அழைத்துச் செல்வதை ஏற்க முடி யாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர். நாகர் கோவிலைச் சேர்ந்த சுயம் புலிங்கம், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக் கல் செய்த மனு:

கல்வி நிறுவனங்களுக் கான வாகன விதி சட்டம் கடந்த 2012இல் அமலா னது. இச்சட்டப்படி, அரசு, தனியார் பள்ளி வாகனங் கள் மஞ்சள் நிறத்தில் இருக்க வேண்டும். வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண் டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகள் உள் ளன. ஆனால் விதிகளை மீறி, வாகனங்களில் அதிக எண்ணிக்கையில் மாணவ, மாணவியர் ஏற் றப்படுகின்றனர். வாக னங்களை முறையாக பராமரிப்பதில்லை.

பல வாகனங்களில் கல்வி நிறுவனத்தின் பெயர் இல்லை. வாகனத்தில் வரும் மாணவர்களை கண்காணிக்க பல வாக னங்களில் நடத்துநர் பணியில் இல்லை. கல்வி நிறுவனங்கள் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபடு கின்றன. எனவே, வாகன விதிகளை முறையாக பின்பற்றவும், இது தொடர்பான நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்த வேண்டு மென்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறி யிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் வாகன விதிகளை ஒரே மாதிரியாக பின்பற்ற வேண்டும்.

குழந்தைகளை பள்ளி களுக்கு ஆட்டோக்கள் மற்றும் ரிக்சாக்களில் எவ் வாறு அனுப்புகின்றனர்? இதை பள்ளி நிர்வாகங் கள் எவ்வாறு ஏற்கின்றன? இதுபோன்ற செயல் களை நீதிமன்றம் ஏற் காது. பள்ளி வாகனங் களுக்கு என பல விதிகள் உள்ளன. ஆனால் ஆட்டோ மற்றும் ரிக்சாக்களுக்கு என்ன விதிகள் உள்ளன. ஏற்கெனவே உள்ள வழி காட்டுதல்களை அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுமாறு உத்தர விட வேண்டும். இது தொடர்பான அரசின் விளக்கத்தை  பள்ளிக் கல்வித்துறை தரப்பில் பெற்று தெரிவிக்க வேண் டும் என உத்தரவிட்டு விசாரணையை 3 வாரம் தள்ளி வைத்தனர்.

No comments:

Post a Comment