சந்தி சிரிக்கும் பணநாயகம்-மாநிலத் தேர்தல்களுக்கு பணத்தை அள்ளிவீசிய பாஜக! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

சந்தி சிரிக்கும் பணநாயகம்-மாநிலத் தேர்தல்களுக்கு பணத்தை அள்ளிவீசிய பாஜக!

உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய அய்ந்து மாநிலங்களில் இந்தாண்டு சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாப்பில் காங்கிரஸிட மிருந்து ஆம் ஆத்மி ஆட்சியை கைப் பற்றியது.

இந்தநிலையில், 5 மாநில தேர்தல் செல வீனம் தொடர்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி கள் தேர்தல் ஆணையத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், பாஜக 5 மாநில தேர்தலுக்கு ரூ. 344.27 கோடி செல விட்டுள்ளது. இது முந்தைய தேர்தல் 2017-இல் ரூ.218.26 கோடி செலவிட்டதை விட 58 சதவீதம் அதிகமாகும்.

பாஜக இந்த 5 மாநிலங்களில் அதிக பட்சமாக உ.பி.யில் ரூ. 221.32 கோடி செல விட்டுள்ளது. இருப்பினும் குறைந்த பெரும் பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்தது. இங்கு 2017 சட்டமன்ற தேர்தலில் பாஜக ரூ. ரூ.175.10 கோடி செலவிட்டது. இதை விட 26 சதவீதம் அதிகமாக இந்தாண்டு தேர்தலில் செலவிட்டுள்ளது.

பஞ்சாப், கோவாவிலும் பாஜக அதிகம் செலவிட்டுள்ளது. இந்தாண்டு தேர்தலில் பஞ்சாப்பில் ரூ. 36.70 கோடி செலவிட்டது. 2017 சட்டமன்றத் தேர்தலை விட அய்ந்து மடங்கு செலவிட்டுள்ளது. 2017இல் ரூ. 7.43 கோடி செலவிட்டது. இருப்பினும் 2 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றது. கோவா வில், இந்தாண்டு தேர்தலில் அக்கட்சி ரூ.19.07 கோடி செலவிட்டுள்ளது. 2017இல் ரூ.4.37 கோடி செலவிட்டதை விட நான்கு மடங்கு அதிகமாகும்.மணிப்பூர் மற்றும் உத் தரகாண்ட் மாநிலங்களில் 2022 சட்டமன்றத் தேர்தல் பாஜக செலவு ரூ.23.52 கோடி (2017இல் ரூ.7.86 கோடி) மற்றும் ரூ.43.67 கோடி (2017இல் ரூ.23.48 கோடி) ஆகும்.

அய்ந்து மாநிலங்களில் பாஜக கட்சியின் மொத்த தேர்தல் செலவீனத்தில், அதன் தலைவர்களின் பயணங்கள்,

பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், விளம்பரங்களுக்கு ஒரு பெரும் தொகை செலவிடப்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் களில் காணொலி பிரச்சாரம் / சமூக வலை தளம் பிரச்சாரங்களுக்கு சுமார் 12 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த மாநி லங்களில் ஜனவரி 8ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தேர்தல் முடியும் வரை மார்ச் 12, 2022 வரை 63 நாட்களில் அதன் மத்திய அலுவலகம் மற்றும் உ.பி., உத்தரகண்ட், பஞ்சாப், மணிப் பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் உள்ள அலுவலகங்களில் ரூ.914 கோடிக்கு மேல் மொத்த வரவுகளை பாஜக தெரிவித்து உள்ளது. இந்த காலகட்டத்தில், காங்கிரஸ் கட்சி ரூ. 240.10 கோடி மொத்த வரவுகளை பெற்றுள்ளது.காங்கிரஸ் கட்சியின் தேர்தல் செலவுகள் மாநில வாரியாக கிடைக்க வில்லை. சமூக வலைதளம்/ஆப்ஸ் மற்றும் பிற வழிகள் மூலம் மெய்நிகர் பிரச்சாரத் திற்கு காங்கிரஸ் 15.67 கோடி ரூபாய் செல விட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் களில் போட்டியிடும் அரசியல் கட்சிகள், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, தேர்தல் முடியும் நாள் வரை செலவிடப்பட்ட பணம், காசோலை, பொருள் என அனைத் தையும் பராமரிக்க வேண்டும். சட்டமன்றத் தேர்தல் முடிந்த 75 நாட்களுக்குள்ளும், மக்களவைத் தேர்தல் முடிந்த 90 நாட் களுக்குள்ளும் தேர்தல் செலவு அறிக் கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப் பிக்க வேண்டும்.


No comments:

Post a Comment