லக்னோ, அக்.6 பிரதமர் மோடி இந்தியாவை ஹிந்து ராட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனை வரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும் என பொதுகூட்டத்தில் பாடகர் தர்மேந்திர பாண்டே கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிர தேசம் மாநிலம் சித்தார்த்தா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரபல பாடகர் தர்மேந்திர பாண்டே கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் மத்தியில் பேசிய அவர், ”பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை இந்து ராஷ்ட்ரியமாக அறிவித்தவுடன் இந்துக்கள் அனை வரும் சிறுபான்மையினருக்கு எதிராக ஆயுதம் ஏந்த வேண்டும். பிரதமர் மோடியிடம் இருந்து உத் தரவு வருவதற்கு முன்பே நாம் அனை வரும் தயாராக இருக்க வேண்டும்.
உங்கள் வீடுகளின் மீது காவிக் கொடி இருக்க வேண்டும். தீபங் களை ஏற்ற வேண்டும். உங்கள் வீடுகளில் ஒரு கூர்மையான அரி வாளை தயார் செய்யுங்கள். பெண்கள் தங்களுக்கான ஆயு தத்தை வைத்திருங்கள். இந்தியாவை பிரதமர் மோடி இந்து ராட்டிரா என்று அறிவித்தவுடன் அவைகள் தேவைப்படும்” என்று தர்மேந்திர பாண்டே பேசிய காட்சிப் பதிவு இணையத்தில் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது தர்மேந்திர பாண்டே பேசியதற்கு கண்டனங்கள் எழுந்ததுடன், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment