பெங்களூரு, அக்.6 பாஜக வினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.
கருநாடகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு உத்தரகன்னடா மாவட் டம் ஹொன்னாவராவில் பரேஸ் மேத்தா என்ற இளைஞர் அய்யத்திற்கிடமான முறையில் இறந்தார். இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என்று கூறி பாஜகவினர், சி.பி.அய். விசாரணை கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து இந்த வழக்கு குறித்து சி.பி.அய். விசா ரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கில் சி.பி.அய். காவல் துறையினர் தற்போது நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், பரேஸ் மேத்தா கொலை செய்யப்பட வில்லை என்றும், அது திடீரென நிகழ்ந்த இறப்பு என்றும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கரு நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட் டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பரேஷ் மேத்தா ஏதோ இயல்பான முறையில் இறந்தார். இது கொலை அல்ல என்று சி.பி.அய். தெரிவித்துள்ளது. சி.பி.அய். அறிக்கை பா.ஜனதாவினரின் கன்னத்தில் விழுந்த அறை ஆகும். பாஜகவினர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண் டும். பா.ஜ.க பெற்றுள்ள ஒவ்வொரு தொகுதியின் வெற்றியின் பின்னா லும் பரேஸ் மேத்தா போன்ற அப்பாவி இளைஞர்களின் ரத்தம் உள்ளது. இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.
பரேஷ் மேத்தாவின் மர ணத்தை அடுத்து அதை மதமோதல் களாக மாற்று பாஜக மற்றும் ஹிந்த்துத்துவ அமைப்புகள் பெரும் முயற்சி செய்தனர். பல பொதுக்கூட்டங்களை நடத்தி குறிப்பிட்ட மதத்தினரால் தான் அவர் கொல்லப்பட்டார். என்று தேர்தல் பரப்புரைகளில் மக்களை ஏமாற்றி மதவாத மோதல்களை ஏற்படுத்தினர். சமீபத்தில் கூட நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பரேஷ் மேத்தாவின் மரணத்திற்கு காரணமானவர்களை காங்கிரஸ் காப்பாற்றுகிறது என்று பாஜக பிரமுகர்கள் பேசியிருந்தனர்.
No comments:
Post a Comment