சென்னை, அக்.1 "எதையும் படிக்காமல் 'வாட்ஸ் அப்பில்' படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது" என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோர் செப்டம்பர் மாதத்தில் பிறந்த காரணத்தாலும், அதே மாதத்தில் திமுக தொடங்கப்பட்டதாலும், செப் டம்பர் மாதத்தை 'திராவிட மாதம்' என திமுக சார்பில் கொண்டாடி வருகி றார்கள். ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தைத் திராவிட மாதமாகக் கொண்டாடும் வகையில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில், ட்விட்டர் ஸ்பேஸில் 'திராவிடத்தைக் கொண்டாடுவோம்' என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள். இந்த தளத்தின் வாயிலாக திமுகவைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர். இன்றுடன் செப்டம்பர் மாதம் முடிவடைய உள்ளதால், தமிழ்நாடு முதலமைச்சரும் , திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் ட்விட்டர் ஸ்பேஸில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-
திராவிடம் தமிழருக்கு தன்னம் பிக்கை ஊட்டியது, சமூக நீதியை நிலை நாட்டியது. திராவிடம் பெண்களுக்கு சம உரிமையை பெற்று தந்தது, தமிழ்நாடு என்று பெயர் சூட்டியது. திராவிடம் இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை தலை நிமிரவைத்தது. தொழில் நுட்பத்தை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் கழகத்தின் வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும் எதையும் படிக்காமல் வாட்ஸ் அப்பில் படித்துவிட்டு வாந்தி எடுப்பவர்களுக்கு பதில் சொல்லி திருத்த முடியாது. இணையத்தில் இயங்கும் நீங்கள் உங்கள் காலத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யுங்கள். நமது சாதனைகளை சொல்லுங்கள், நமது கொள்கையை சொல்லுங்கள் தவறான தகவலாக இருந்தால் அதற்கு உண்மையான தகவலை சொல்லுங்கள். நமது எதிரிகள், மதவாத ஜாதியவாத சக்திகள் அவதூறு பேசுவார்கள் கொச் சையாக பேசுவார்கள், கோபப்படுத்த பேசுவார்கள், இவை அனைத்தையும் புறந்த தள்ளிவிட்டு ஆக்கப்பூர்வமாக செயல்படுவோம்" என்றார்.
No comments:
Post a Comment