ஈரோடு, அக். 3- ஈரோடு பெரியார் நகர் பெரியார் தொண்டர்.ப.சம்பத் தனது 76ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார்-அண்ணா நினைவகத்தில் உள்ள தந்தை பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினார்.
பின்னர் ஈரோடு பெரியார் மன்றத்தில் கழ கத்தின் சார்பில் மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அவ ருக்கு பயனாடை அணி வித்து இயக்க நூல்களை வழங்கினார்.
பொதுக்குழு உறுப்பி னர் கோ.பாலகிருஷ்ணன் பயனாடை அணிவித் தார். கழக மண்டல தலை வர் இரா.நற்குணன், மாவட்ட தலைவர் கு. சிற்றரசு,மாவட்ட செய லாளர் மா.மணிமாறன், பேராசிரியர் ப.காளி முத்து, மாவட்ட தொழி லாளரணி செயலாளர் தே.காமராஜ், பகுத்தறி வாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பி.என். எம்.பெரியசாமி,மாலதி பெரியசாமி, பெரியார் தொண்டர்.பா.சத்திய மூர்த்தி, ஜெயராணி சத் தியமூர்த்தி, தமிழ்ச்செல் வன், ஜெபராஜ் செல்லத் துரை, இரா.பார்த்திபன், மண்டல மகளிரணி அமைப்பாளர் இராஜேஸ் வரி, பெரியார் தொண்டர் தலசை.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
No comments:
Post a Comment