இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

இனவுணர்வைத் தூண்டும் குருமூர்த்திகள்

மின்சாரம் 

ஆடிட்டர் குருமூர்த்தி எடிட்டர் ஆகி சோ குடும்பத்திடமிருந்து 'துக்ளக்'கை கைப்பற்றி, தம் பூணூல் கோத்திரத்தை 'நிர்வாணமாகக்' காட்டிக் கொண்டு வருகிறார். தந்தை பெரியார்மீது பழிப்பு, முதலமைச்சர்மீது வெறுப்புக் கனல் வீசுவது, திராவிடத்தை இழித்துரைப்பது என்பது அவருடைய பிழைப்பாகி விட்டது.

திராவிட இயக்கத்தைச் சீண்டிப் பார்க்கிறது சிண்டு.

இவ்வார துக்ளக்கில் (26.10.2022) எழுதப்பட்ட கேள்வி- பதில்களுக்கு சாட்டை அடி இங்கே!

கேள்வி: தியாகம் செய்வது - தானம் செய்வது ஒப்பிடுக?

பதில்: தன்னிடத்தில் இருப்பதைக் கொடுப்பது - தானம், தன்னையே கொடுப்பது - தியாகம். 

நமது பதிலடி: தன்னிடத்தில் இருந்து கொடுப்பது தர்ப்பைப் புல்! தானம் என்பது சுரண்டும் புரோகிதத் தொழில்.

கேள்வி: மதச் சார்பின்மை என்பதற்கு திராவிட மாடலில் என்ன அர்த்தம்?

பதில்: ஹிந்து மதச் சார்பின்மை என்று அர்த்தம்.

நமது பதிலடி: ஹிந்து என்றால் நாங்கள் சூத்திரர்கள் -& வேசி மக்கள் என்று அர்த்தப்படுவதால் 'திராவிட மாடல்' என்பது ஹிந்து மதச் சார்பின்மை என்று பொருள்.

கேள்வி: 'வள்ளலார், பெரியார் பாதைகள் ஒரே இலக்கை நோக்கி இணையும் இரு வழிப் பாதை' என்கிறாரே வீரமணி! சரியா?

பதில்: வள்ளலார் பாதையும், ஈ.வெ.ரா. பாதையும் ஒரே இலக்கை நோக்கியது என்று கி.வீரமணி கூற இரண்டு காரணங்கள்தான் நமக்குத் தெரிகிறது. முதுமைக் காலத்தில் ஆன்மிகவாதிகளாகும் நாஸ்திகர்களைப் போல் 88 வயதில் அவருக்கும் வள்ளலார்மீது ஈடுபாடு வந்திருக்கிறது அல்லது முதுமை நோயால் (Senile)  பாதிக்கப்பட்டு இருக்கிறார் அவர்.

நமது பதிலடி: 

'நால்வருணம் ஆச்சிரமம் ஆச்சாரம் முதலா
நவின்ற கலைச் சரிதமெலாம் பிள்ளை விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவாரில்லை
நீ விழித்திதுபார் என்றெனக்கு விளம்பிய சற்குருவே' 

என்று இராமலிங்க வள்ளலார் பாடினார். "ஈரோடும், வடலூரும்" என்று 1930களிலேயே நூல் வந்திருப்பது எல்லாம் இந்தப் பூணூல் களுக்குத் தெரியுமா? 'குடிஅரசு' இதழிலும் வள்ளலார் பாடல்கள் வெளி வந்தது புரியுமா?

கல்மனப் பார்ப்பார் தங்களைப் படைத்துக்
காகத்தை யென் செயப் படைத்தாய்?

      -விவேக சிந்தாமணி (பாடல் & 82)

சாஸ்திரம் பார்த்துப் பிறந்தாளாம் - பின்
சாஸ்திரம் பார்த்து சமைந்தாளாம்
சாஸ்திரம் பார்க்கின்ற பார்ப்பாரப் பெண்கள்
தாலியறுப்பதேன் ஞானப் பெண்ணே

 -  ஞான வெட்டியான்

சத்தியம் இன்றித் தனிஞானந் தானின்றி
ஒத்த விடையுடன்விட் டோடும் உணர்வின்றிப்
பத்தியும் இன்றிப் பரன் உண்மை இன்றிப்
பித்தேறும் மூடர் பிராமணர்தாம் அன்றே
        - திருமந்திரம்

இன்னும் எவ்வளவோ வண்டி வண்டியா கிடக்கு!

பார்ப்பனர்கள்பற்றி தந்தை பெரியாரின் கருத்துக்களோடு ஒத்துப் போவதை வெளிப்படுத்தினால் பார்ப்பனக் குருமூர்த்திகளைப் பாடாய்ப்படுத்துதோ!

எத்தனை ஆதிக்கப் பெருமக்கள் வயது மூப்பில் நாத்திகர் ஆனார்கள் என்ற பட்டியல் வேண்டுமா 'துக்ளக்'கே!

சிவசேனா நிறுவனர் பால்தாக்கரே, தன் மனைவியின் மரணத்தைத் தொடர்ந்து வீட்டிலிருந்த ஹிந்துக் கடவுள்களையெல்லாம் வீசி எறிந்தாரே தெரியுமா குருமூர்த்தியே?

கேள்வி: ஈ.வெ.ரா. நடத்தி வந்த விடுதலை பத்திரிகையைத் தங்கத் தட்டில் வைத்த வைரம் என்று கூறலாமா?

பதில்: திருக்குறளைத் தங்கத் தட்டில் வைத்த மலம் என்று கூறிய ஈ.வெ.ரா.வின் சமூக நீதித் தட்டில் வைத்த வைரம் என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நமது பதிலடி: புளுகாதே குருமூர்த்தியே  & ஆதாரத்தோடு எடுத்துக்காட்டு என்று எத்தனை முறையோ எடுத்துச் சொல்லியும் 'கந்தனுக்குப்புத்தி கவுட்டியில்' என்பது போல உளறுவது அவாளின் தனித்தன்மை. 

தமிழை நீஷப் பாஷை என்று கூறும் 'லோகக் குருக்களின்' சீடர்கள் அல்லவா - அதனால் தமிழ் என்றாலே எப்படியோ கொச்சைப்படுத்த வேண்டும் என்ற அற்பப்புத்தி!

"தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ்மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்டாலும், தமிழ்மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்க நூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமிழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய் மொழியெனக் கருதுவதில்லை -& அவர்களின் எண்ணமெல்லாம் வட மொழியாகிய சமஸ்கிருததத்தின் மீதுதான்."

                - அறிஞர்அண்ணா ('திராவிட நாடு' 2.11.1947)

பார்ப்பனர்களுக்குத் தமிழ் -& பிழைப்புக்கு ஒரு கருவியே! இந்த யோக்கியதை உடையவர்கள் தமிழைப் பற்றியும், திருக்குறள் குறித்தும் அபாண்டமாகப் பழி சுமத்துவது வழி வழியாக வந்த ஆரியப் புத்தியே!

'விடுதலை' சமூகநீதிக்காகக் குரல் கொடுப்பது குறித்து குருமூர்த்திகளின் விலாவை கூர் ஈட்டியாகக் குடைகிறது. அந்த ஆத்திரத்தில் அய்யர் வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது.

30 சதவீதப் பெண்கள்தான் பெண்மை உடையவர்கள் என்று சொன்னபோதே பெண்கள் மொத்தியிருந்தால் குருமூர்த்தி இப்படியெல்லாம் துள்ள மாட்டார்.

No comments:

Post a Comment