ராய்ப்பூர், அக். 26- சத்தீஸ்கர் மாநிலத்தில் கவுரி-கவுரா பூஜை என்கிற பெயரில் மூடத்தனம் அரங்கேற்றப் பட்டு வருகிறது. அந்த பூஜையின் பெயரால் புற்களைக்கொண்டு சவுக்கு தயாரிக்கப்பட்டு, சவுக்கடி கொடுக்கப்படு கிறதாம். சவுக்கடியால் வளம்பெருகும் என்கிற மூடநம்பிக்கைக்கு அந்த மாநிலத்தின் முதலமைச் சரும் தப்பவில்லை.
கவுரி - கவுரா பூஜையில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கும் சவுக்கடி கொடுக்கப்பட்டதாம். இந்த சவுக்கு ‘சொந்தா’ என அழைக்கப்படுகிறது. ‘குஷ்’ எனப்படும் ஒரு வகை புற்களை கொண்டு இந்த சவுக்கு தயாரிக்கப் படுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது, மேளதாளங் கள் உள்ளிட்ட இசை கரு விகளும் பின்னணியில் இசைக்கப்பட்டன. சவுக் கடி பெறுபவர்களுக்கு ஆசியும், வளமும் கிடைக் கும் என்கிற மூட நம்பிக் கையில் முதலமைச்சரும் பங்கேற்றது விமர்சனத் துக்குள்ளாகி வருகிறது.
No comments:
Post a Comment