பிராண்டெட் நிறுவனங்களுக்கான கமர்ஷியல் போட்டோகிராபராக செயல் பட்டு வரும் ப்ரீத்தி, சுமார் 10 பெண் சுய தொழில் முனைவோரை உருவாக்கியுள்ளார். மேலும் 1500 பெண்களுக்கு கமர்ஷியல் போட்டோகிராபி குறித்து பயிற்சியும் வழங்கி வருகிறார். ‘‘2018ஆம் ஆண்டு என் மகள் பிறந்தாள். அவளை படங்கள் எடுப்ப தற்கும், வீட்டு சிறப்பு நிகழ்வுகளை படம் பிடிக்கவும் கேமரா வாங்கினேன். இப்போது அதுவே என்னுடைய தொழிலாக மாறிவிட்டது’’ என்று பேசத் துவங்கினார் ப்ரீத்தி.
‘‘மதுரையை சொந்த ஊராக கொண்ட இவர், தகவல் தொழில்நுட்பத்தில் இளநிலை பட்டமும், எம்.பி.ஏவும் முடித்திருக்கிறார். தற்போது குஜராத் மாநிலம் சூரத்தில் வசித்து வரும் இவர், சோப்பு, ஷாம்பு, மருந்துகள், உணவு பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் பிரான்டெட் நிறுவ னங்களுக்கான கமர்ஷியல் போட்டோ கிராபர் மட்டுமில்லாமல் குழந்தைகளையும் படம் பிடித்து வருகிறார்.
அதன் பிறகு போட்டோகிராபி தான் படிக்க நினைத்தேன். இதற்கிடையில் எனக்கு திருமணமானது. ஆனால் எப்படி யும் ஒளிப்படத் துறையில் முதுகலைப் பட்டம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என் மனதில் ஓடிக் கொண்டே இருந்தது. அதனால் திருமணம் முடித்த அடுத்த ஆண்டு போட்டோகிராபி குறித்த பயிற்சியில் ஈடுபட்டேன். அதற்கான வகுப்பு களுக்கு செல்ல ஆரம்பித்தேன். போட்டோ கிராபி சார்ந்த காணெலிகளை பார்த்தேன். அந்த துறை சார்ந்த நிபுணர்களின் பேட்டி மற்றும் அனுபவங்களை கேட்பேன். ஒளிப் படங்களை எடுத்து பழக ஆரம்பிச்சேன். இரண்டரை ஆண்டுகள் காலளவிலான போட்டோகிராபி குறித்த முதுகலை படிப்பிற்கு நான் தனிப்பட்ட முறையில் பயிற்சி எடுத்தேன்’’ என்றவர் அந்த துறை யுள்ள கல்லூரிகளில் விண்ணப்பித்தும் உள்ளார். அந்த கல்வி நிறுவனத்தில் படிக்க வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை’’ என்று கூறும் ப்ரீத்தி, போட்டோகிராபி துறையில் எவ்வாறு தனக்கான ஒரு இடத்தினை பதிவு செய்தார் என்பதைப் பகிர்ந்து கொண்டார்.
‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் நிறைய பேருக்கு வேலை இல்லாமல் போனது. ஆனால் எனக்கான முதல் வாய்ப்பு ஊரடங்கு காலத்தில் தான் கிடைத்தது. அந்த நேரத்தில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால், வெளியே போய் ஷுட்டிங் எல்லாம் எடுக்க முடியல. வீட்டில் இருந்த சாதாரண பொருட் களான சோப்பு, ஷாம்புவை போட்டோ எடுத்தேன். கொஞ்சம் சிரமப்பட்டாலும், நான் இது குறித்து பயிற்சி எடுத்தது கைகொ டுத்தது. எங்க அடுக்குமாடி குடியிருப்புக்கு என தனிப்பட்ட வாட்ஸ்சப் குரூப் இருக்கு. நான் எடுத்த ஒளிப்படத்தை அதில் பதிவு செய்தேன். எங்க குடியிருப்பில் பல பெண் கள் தொழில் முனைவோராக இருக்காங்க.
அவங்க நான் எடுத்த ஒளிப்படத்தைப் பார்த்து தங்களின் தயாரிப்பு பொருட்களை ஒளிப்படம் எடுத்து தரச்சொன்னாங்க. இதன் மூலம் அவர்களின் பொருட்களை கமர்ஷியல் முறையில் மார்க்கெட்டிங் செய்ய விரும்பினாங்க. நானும் தன்னம் பிக்கையுடன் செயல்பட்டேன். அவர்களின் அந்த ஒளிப்படங்கள் மூலம் பல பிராண்ட் நிறுவனங்கள் எனக்கு வாய்ப்பளிக்க முன் வந்தார்கள். அவர்களின் தயாரிப்புகளுக்கு கமர்ஷியல் போட்டோகிராபராக நான் மாறினேன்.
வீட்டில் இருந்தபடியே செயல்படுவதால், என்னால் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு பிடித்த வேலையும் பார்க்க முடிகிறது. எல்லாம் கமர்ஷியல் பிராண்ட் என்பதால், அவர்கள் தங்களின் பொருட் களை எனக்கு அனுப்பி எப்படி ஒளிப்படம் வேண்டும்னு சொல்லிடுவாங்க. நான் ஒளிப் படம் எடுத்து அவர்களுக்கு அனுப்பிடு வேன். இதற்காக வீட்டில் ஒரு ஒளிப்பட நிலையத்தை அமைத்திருக்கேன்’’ என்றவர் போட்டோகிராபி துறையில் ஆர்வம் உள்ள பெண்களுக்கு பயிற்சியும் அளித்து வருகிறார்.
No comments:
Post a Comment