பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

பதிலடிப் பக்கம்

நடப்பது "ராமராஜ்ஜியம்" - ஒற்றுமையற்ற தேசியம்

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., 

சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் 

பதிலடிகளும் வழங்கப்படும்)

24.10.2022 அன்றைய தொடர்ச்சி...

ஆதித்யநாத் யோகியின் மதவெறிப் பேச்சு

ஒரு இந்துப் பெண்ணை முஸ்லிமாக மாற்றினால் நாம் நூறு முஸ்லிம் பெண்களை இந்துக்களாக மாற்ற வேண்டும்.

சாத்வி நிரஞ்சன் ஜோதி

டில்லியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில், இந்தியாவில் ராமனை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் ராமரின் பிள்ளைகள் (ராம் ஜாதி). ராமனை ஏற்றுக் கொள் ளாத அனைவரும் (ஹராம் ஜாதி) முறை தவறிப் பிறந்தவர்கள் என்று பேசினார்.

பகவத் கீதை இந்தியாவின் புனித நூல்

டில்லியில் பகவத் கீதை தொடர்பான விழா ஒன்றில் பேசிய ஒன்றிய வெளி விவகாரத்-துறை அமைச்சா சுஷ்மா சுவராஜ் இந்தியாவின் புனித நூலாக பகவத் கீதையை அறிவிக்க வேண்டும். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். (டில்லி 8.12.2014)

கிரிராஜ் சிங்

மோடியை ஆதரிக்காதவர்கள் எல் லாம் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்த கிரிராஜ் சிங், பா.ஜ.க. நாடாளு மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு அவருக்கு பீகார் மாநிலத் தில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட்டது. இவரது வீட்டில் இருந்து  கோடிக்கணக்கான கணக்கில் வராத ரூபாய் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டது. கொலைகள் பல புரிந்த ரன்வீர்சேனா அமைப்பின் முக்கியமான ஆதரவாளர்களில் இவரும் ஒருவர்.

அசோக் சிங்காலின் அநாகரிக உளறல்கள்

மதமாற்றம் தொடர்பான சிக்கலில் நாடு மூழ்கிக்-கொண்டு இருக்கும்போது மேலும் மக்களிடையே அச்சத்தை உண்டுபண்ணும் விதமாக, முஸ்லீம் மற்றும் கிறித்தவர்களால்தான் நாட்டில் வன்முறைகள் நிகழ்கின்றன என்று வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் கூறினார்.

பத்திரிகை ஒன்றிற்குப் பேட்டியளித்த அவர், நமது நாடு மிகவும் புனிதமான நாடு ஆகும். இந்தப் புனி தத்தை முஸ்லீம் மற்றும் கிறித்தவர்கள் களங்கப்படுத்தி விட்டனர். நடக்கும் எல்லா வன்முறைகளுக்கும் காரணம் கிறித்தவர்களும் முஸ்லீம்களும்தான்.

நமது நாடு மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கிறித் தவ மற்றும் இஸ்லாமிய மதத்தினரால் வன்முறைக்கு ஆளாகியுள்ளது. மேலைநாடுகள் பணபலத்தால் கிறித்தவத்தின் பெயரால் பிறநாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன. இஸ்லாமியர்கள் தங்களது மதத்தின் பெயரால் ஆங்காங்கே மக்களைக் கொன்று குவிக் கின்றனர்.

மோடியின் பெயரைக் குறிப்பிடாமல் பேசிய அவர், தற்போதைய அரசு இந்துக்களுக்கு முழுமை யாகப் பாதுகாப்புக் கொடுத்து வருகிறது. இந்த அரசின் காலத்திலேயே நாம் அனைத்து அந்நிய மதத்தவ ரையும் இந்துக்களாக மாற்ற வேண்டும். தற்போது மோகன் பகவத் அவர்கள் திறந்த மனதுடன் மதமாற்றத் திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது எங்களுக்குப் புதிய ஓர் ஆற்றலைத் தந்திருக்கிறது. ஆகையால் இனி நாங்கள் முழு வீச்சுடன் செயல்படுவோம் என்று கூறினார். (Navbharat Times 21.12.2014)

நேருவைக் கொன்றிருக்க வேண்டும்!

வரலாற்றைக் கொஞ்சம் நியாயமான மனதுடன் திரும்பிப் பார்த்தால் இந்தியா பிரிவினைக்கு உள்ளானதையும் கோட்சே குறித்தும் தெளிவான முடிவுக்கு வரமுடியும். அப்போது கோட்சே தவறான மனிதரைத் தேர்ந்தெடுத்து விட்டார் என்ற முடிவுக் குத்தான் மக்கள் வருவார்கள்.

இந்தத் தேசம் கண்ட மிக மோசமான சோகங்க ளுக்கு நேருதான் காரணகர்த்தாவாக இருந்தார். இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் உருவாக்கப் பட்ட தற்கும், காந்தி கொலைக்கும் நேருவின் சுயநலமே காரணம். கோட்சே நெஞ்சில்தான் சுட்டார். ஆனால் நேருவோ காந்தியின் முதுகில் குத்தினார்.

உண்மையில் கோட்சே நேருவைத்தான் சுட்டிருக்க வேண்டும்.

(கேரளா - ஆர்.எஸ்.எஸ். ஏடான கேசரியில் பி.கோபாலகிருஷ்ணன்)

முஸ்லீம்கள் நாய்போல் பிள்ளைகளைப் 

பெற்றுத் தள்ளுகிறார்கள் - பிராசி சாமியாரினி

விஷ்வ இந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசிய பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான பிராசி சாமியாரினி, இந்துக்கள் 4 குழந்தைகளைப் பெறவேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள் மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடு படும் அரசியல் தலைவர்கள் கூறினால் தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாகச் சித்தரித்து மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் இந்து நலனுக்கு எதிரானவர்கள், இந்துராட் டிரம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடுபவர்கள். இவர்களால் நமக்கு என்றென்றும் தொல்லைதான்.

ஆனால் லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்) செய்பவர்கள் 40 குழந்தைகளை நாய்களைப் போல் பெற்றுத் தள்ளுகின்றனர்.

இப்படி நாய்களைப் போல் குழந்தை பெறுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இந்து ராட்டிரத்தின் ஒற்றுமைக்கு 4 குழந்தைகளைப் பெறக் கூறினால், அதை எதிர்க்கின்றனர். இனிவரும் காலங்க ளில் எந்தவிதப் பொய்ப் பிரச்சாரங்களையும் இந்து மக்கள் கவனத்தில் கொள்ளக் கூடாது. அவர்களது கடமை 4  குழந்தைகளைப் பெறுவது மட்டுமே, இதைத் தொடர்ந்து செய்துவந்தால் விரைவில் நமது நாடு இந்து நாடாக மாறிவிடும்.

மேலும் 4 குழந்தைகளுக்கு மேல் உள்ள இந்துக் குடும்பங்களுக்குப் பாராட்டும் பணமும் வழங்கப்படும். இதன் மூலம் அனைத்து இந்துக்களும் 4 குழந்தை களுக்கு மேல் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கடமையுணர்ச்சி வரும். இந்தியாவில் உள்ள முக்கிய முஸ்லீம் தலைவர்கள் அனைவரும் தங்கள் தாய்மத மான இந்துமதத்திற்குத் திரும்பவேண்டும் என்று கூறினார்.(IBN LIVE 2.2.2015)

அடுக்கடுக்கான அலை அலையான அனல் கக்கும் இந்த விஷ ஊற்றுக்கண்கள் எதைப் போதிக்கின்றன? 

எவற்றை வெளிப்படுத்துகின்றன? இந்தியாவில் ஜனநாயகத்தின் பேரால் அசல் பாசிச பார்ப்பனீய ஆட்சி ஆயிரம் தலை நச்சுப் பாம்பாகப் படம் எடுத்து ஆடுகிறதே!

சங்பரிவார்கள்தானே பேசுகின்றன - ஆர்.எஸ்.எஸ்.தானே ஆலகால நஞ்சைக் கக்குகிறது - பி.ஜே.பி. என்ன செய்யும் என்ற பசப்பு வார்த்தைகளைச் சொல்லி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிவிட்டது.

பச்சையாக பி.ஜே.பி. தலைவர்கள் ஆர்.எஸ்.எசுக்கு வக்காலத்து வாங்கிப் பேச ஆரம்பித்து விட்டனர். ஆர்.எஸ்.எஸின் பிரதமருக்கான வேட்பாளர்தான் நரேந்திர மோடி என்பதும் வெளிச்சமாகி விட்டது. முக்கியப் பிரச்சினைகளில் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டளையிடுகிறார். அமைச் சர்கள் அவரை ஓடி ஓடிச் சந்திக்கின்றனர். ஆலோச னைகளைப் பெறுகின்றனர்.

தொலைக்காட்சி விவாதங்களில் அதற்கு முன் பெல்லாம் ஆர்.எஸ்.எஸ். பற்றி பிரச்சினைகள் வந்த போதெல்லாம் பி.ஜே.பி.க்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் தொடர்பில்லை என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்வார்கள். பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்துவிட்ட  இக்காலகட்டத்தில் மிக வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ்.சுக்கு வக்காலத்துப் போட்டு ஜம்பமாகப் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அதிகாரப்பூர்வமாகச் சொல்ல வேண்டுமானால் 16ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பி.ஜே.பி.க்குத் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி பேட்டி கொடுத்தது நினைவில் இருக்கிறதா?

எந்த விஷயத்தில் இறங்குவதாக இருந்தாலும் அதற்கு முன் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அறிவுரை யைக் கேட்பது எங்கள் வழக்கம். எங்கள் தேர்தல் அறிக்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தாக்கம் இருப்பதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று பி.ஜே.பி. தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி  (தினமலர் 13.4.2014) தெளிவுபடுத்திய பிறகு வேறு என்ன இருக்கிறது?

சுருக்கமாகச் சொல்லப்போனால் இந்துத்துவ - பாசிச - பார்ப்பனீய ஆட்சி கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஒடுக்கப்பட்ட மக்களின் கரங்கள் ஓங்கட்டும். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் தோள்கள் சிறுபான்மை மக்களின் சிரங்கள் கிளர்ந்து எழ வேண்டிய  தருணம் இது.

மதச்சார்பின்மை சக்திகள் சுதந்திரப் போராட்ட மாகக் கருதிக் கிளர்ந்து எழ வேண்டிய கால-கட்டம் இது.

இந்த ராமராஜ்ஜிய நோய்க்கு உடனடியான தீவிர மூலிகை - மாமருந்து - தந்தை பெரியாரியலே!

ஒரு நூற்றாண்டுக்கு முன்பே ராமனைத் தோலுரித் தவர் - ராமர் படத்தை எரித்தவர் பெரியார்! - ராம ராஜ்ஜியத்தின் எதிர் தத்துவம் தந்தை பெரியார் ராம சாமி ராஜ்ஜியம்தானே!

No comments:

Post a Comment