மழைக்காலம் முழுவதும் காய்ச்சல் முகாம் தொடரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

மழைக்காலம் முழுவதும் காய்ச்சல் முகாம் தொடரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை, அக்.7 மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.  சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மால்டா குடியரசு நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஜோ - எட்டினே - அபெலா ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் செந்தில்குமார் மற்றும் மால்டா நாட்டை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்ரமணியன், மழைக்காலம் முடியும் வரை காய்ச்சல் முகாம் தொடர்ந்து நடைபெறும் என்று கூறினார். 

இதுகுறித்து அவர் கூறும்போது, "எச்1என்1 பாதிப்பு தொடங்கிய நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது பள்ளிகளிலும் வாகனங்கள் மூலம் சென்று இதுவரை 18 ஆயிரத்து 973 முகாம்கள் நடைபெற்றிருக்கின்றன. மேலும் 12 ஆயிரத்து 162 காய்ச்சல் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் பயன்பெற்றவர்கள் 18,08,204 பேர் பயன்பெற்றுள்ளனர். தொடர்ச்சியாக இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என்று கூறினார்.

No comments:

Post a Comment