ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜ.க. விரும்புகிறது : சித்தராமையா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

ஜாதி, மத அடிப்படையில் மக்களை பிரிக்க பா.ஜ.க. விரும்புகிறது : சித்தராமையா

பெங்களுரு,அக்.3 நாட்டில் ஜாதி, மத அடிப்படையில் மக்களைப் பிரிக்க பா.ஜனதா விரும்புகிறது என்று சித்தராமையா குற்றம் சாட்டி உள்ளார். 

ராகுல் காந்தியின் நடைப் பய ணத்தில் கலந்துகொண்ட கரு நாடக மேனாள் முதலமைச்சர் சித்தராமையா பேசியதாவது:- ராகுல் காந்தியின் நடைப்பயணம் குண்டலுப்பேட்டையில் தொடங் குகிறது. கருநாடகத்தில் 8 மாவட் டங்கள் வழியாக இந்த நடைப் பயணம் 511 கிலோ மீட்டர் தூரத் திற்கு நடக்கிறது. ஒட்டுமொத்தமாக நாட்டில் 3 ஆயிரத்து 570 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த  நடைப் பயணம் நடக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இவ்வளவு தூரம் கொண்ட  நடைப் பயணத்தை  யாரும் நடத்தியது இல்லை.  நாட்டில் மோடி பிரதமரான பிறகு மத வெறுப்பு அரசியல் தொடங் கியுள்ளது. பெண்கள், விவசாயிகள், சிறுபான்மை மக்கள் பயத் தில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனநாயகம், அரசியல் சாசனத்தில் நம்பிக்கை இல்லாத கட்சி பா.ஜனதா. பா.ஜனதா கட்சியினர் ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே சினனத்தில் நம்பிக்கை கொண்டு செயல்பட்டுக் கொண் டிருக்கிறார்கள். வாஜ்பாய் பிரதம ராக இருந்தபோது அரசியல் சாச னத்தை மாற்ற முயற்சி நடந்தது. ஆனால் அப்போது இருந்த குடி யரசுத் தலைவர் அதை அனுமதிக்க வில்லை. நாட்டில் அமைதி, நல் லிணக்கம் இருக்கக் கூடாது, ஜாதி, மதம் அடிப்படையில் மக்களை பிரித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்று பா.ஜனதா விரும்புகிறது. மோடி பிரதமரான பிறகு இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்துள்ளது. ஊழல் தாண்டவமாடுகிறது இதை சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நாம் தடுக்க வேண்டும். இது நமது கடமை. 

கருநாடகத்தில் ஊழல் தாண்ட வமாடுகிறது.  இது 40 சதவீத கமிஷன் அரசு என்று மக்கள் பேசிக்கொள்கிறார்கள். அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டு மென்றால் பா.ஜனதாவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். ராகுல் காந்தியின் நடைப் பயணம் கருநாடகத்தில் வெற்றி பெற வேண்டும். இந்த  நடைப் பயணத்தை பா.ஜனதா வால் சகித்துக்கொள்ள முடிய வில்லை. அதனால் காங்கிரஸ் பதாகைகளை கிழிக்கிறார்கள். இது தொடர்ந்தால் பா.ஜனதா தலைவர்கள் வெளியில் நடமாட விடமாட்டோம். 

காவல்துறை பா.ஜனதாவினர் கூறியபடி செயல்படுகிறார்கள். இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் அரசு அமைய உள்ளது. காங்கிரசுக்கு எதிராக செயல்படும் காவல் துறைக்கு நாங்கள் தக்க பாடம் புகட்டுவோம். இவ்வாறு சித் தராமையா பேசினார்.

No comments:

Post a Comment