தெலங்கானா, நாராயண்பேட்டையில் மீண்டும் துவங்கியது நடைப் பயணம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

தெலங்கானா, நாராயண்பேட்டையில் மீண்டும் துவங்கியது நடைப் பயணம்

அய்தராபாத், அக். 30- தெலங்கானா மாநிலம் நாராயண் பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நடைப் பயணம் மீண்டும் தொடங்கியது. காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ”ஒற்றுமைக்கான நடைப்பயணம்”  மேற் கொண்டு வருகிறார். மொத்தம் 150 நாட்கள் நடைபெற உள்ள இந்த பயணம் தற்போது வரை 30 நாட்களை கடந்துள்ளதுடன், தமிழ்நாடு, கேரளாவை கருநாடகாவைக் கடந்து ஆந்திரா, தெலங்கானாவில் நடைபெற்று வருகிறது. 

தமிழ்நாட்டில் 3 நாட்கள் நடைப் பயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 11ஆம் தேதி கேரளாவில் தனது நடைப் பயணத்தை தொடங்கினார் தொடர்ந்து 19 நாட்கள் கேரளாவில் நடைப்பயணம் மேற்கொண்ட அவர், செப்டம்பர் 30ஆம் தேதி கருநாடகாவில் தனது நடைப் பணத்தை தொடங்கினார். 

கடந்த 23-ஆம் தேதி ராகுலின் நடைப் பயணம் தெலுங்கானாவுக்குள் நுழைந்தது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி 3 நாட்கள் ஓய்வு அளிக்கப்பட்டது. இந் நிலையில், தெலங்கானா மாநிலம் நாராயண்பேட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் நடைப் பயணம் மீண்டும் தொடங்கியது.

No comments:

Post a Comment