மும்பை, அக்.24 மராட்டியத்தில் நடைபெறும் ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்பேன் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.
ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் 3 ஆயிரத்து 570 கி.மீ. தூரத்துக்கு நடைப்பயணத்தில் மேற்கொண்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் நடைப்பய ணத்தைத் தொடங்கிய அவர் கேரளா, கருநாடகாவை கடந்து தற்போது ஆந்திராவில் உள்ளார். மேலும் அவர் தெலங்கானாவில் யாத்திரையை முடித்துவிட்டு, வருகிற 7 ஆம் தேதி மராட்டியம் வருகிறார். ராகுல்காந்தி 14 நாள்கள் மராட்டியத்தில் 5 மாவட் டங்களில் நடைப்பயணம் மேற்கொள் கிறார்.
ராகுல்காந்தியின் நடைப் பயணத்தில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்க ரேயை காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்தித்து அழைப்பு விடுத்தனர். இந்தநிலையில் ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்பேன் என சரத்பவார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (23.10.2022) பாராமதியில் கூறிய தாவது:- மாநில காங்கிரஸ் தலைவர்கள் அசோக் சவான், பாலாசாகிப் தோரட் என்னை சந்தித்து, ராகுல்காந்தியின் நடைப்பயணத்தில் பங்கேற்க வேண் டும் என அழைப்பு விடுத்தனர். நடைப்பயணம் காங்கிரசின் நிகழ்ச்சி. ஆனால் சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்படுகிறது. எனவே வேறு கட்சிகளைச் சேர்ந்த என்னை போன்ற சிலரும் மராட்டியத்தில் வாய்ப்புள்ள இடங்களில் நடைப் பயணத்தில்பங்கேற்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment