சர்வ சக்தியா ? சர்வ சைபரா ? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

சர்வ சக்தியா ? சர்வ சைபரா ?

சுப்பன் : சர்வ சக்தியுள்ள கடவுளை நம்ப மாட்டேன் என்கிறானே இந்தப் பாவி, எவ்வளவு சொன்னாலும் ஒத்துக்க மாட்டேன் என்கிறானே!

ராமன் : அது மாத்திரம் அதிசயமல்லப்பா; பசியாவரம் பெற்ற இந்த மகான் உணவு இல்லாமல் சாகக் கிடக்கிறார்; ஒருவன் கூட ஒரு கைக்கூழ் ஊத்த மாட்டேன் என்கிறானே!

சுப்பன் : பசியா வரம் பெற்றவனுக்குக் கஞ்சி என்னத்துக்கு ? பட்டினி கஷ்டம் எப்படி வந்தது?

ராமன் : இதுதான் வேடிக்கையா? நீ சொல்வது மட்டும் வேடிக்கையாக இல்லையா?

சுப்பன் : என்ன நான் சொல்றதிலே வேடிக்கை?

ராமன் : சர்வ சக்தி உள்ள கடவுள் என்றாய், அவனை ஒருத்தன் அப்படிப்பட்ட கடவுள் இல்லே என்று சொல்லுகிறான் என்றால் அது வேடிக்கையாக இல்லையா?

சுப்பன்: சர்வ சக்தி உள்ள கடவுள் என்கிறாய்.அந்த சர்வ சக்திக்கு இந்த ஒரு சாதாரண மனுஷனை நம்பும்படி செய்ய முடியவில்லை என்றால் இது முட்டாள்தனமான, சிரிப்புக்கு இடமான காரியமாக இல்லையா?

அதாவது, பசியா வரம் பெற்ற மகான் பசியால் வாடுவது என்பதில் எவ்வளவு பித்தலாட்டம் இருக்கிறதோ, அதேபோல் சர்வ சக்தி உள்ள கடவுள் என்பதை ஒரு சாதாரண மனிதன் நம்பவில்லை என்பதும், அவனை நம்பச் செய்ய அந்தக் கடவுளால் முடியவில்லை என்பதும் ஆகும்.

- சித்திரபுத்திரன் -  விடுதலை - 22.02.1972


No comments:

Post a Comment