சென்னை, அக். 30- தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி, நேற்று (29.10.2022) உலக பக்கவாத நோய் தடுப்பு நாளையொட்டி, கொளத்தூர் சட்டமன் றத் தொகுதியில், நரம்பி யல் மற்றும் பக்கவாத சிறப்பு மருத்துவ முகா மினை வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை நடத்தி யது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. கே. சேகர் பாபு மற்றும் பெருநகர சென்னையின் மேயர் பிரியா ஆகியோர் இந் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித் தனர்.
கொளத்தூரில் உள்ள எவர்வின் பள்ளி வளா கத்தில் நடைபெற்ற இம் மருத்துவ முகாமில் சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரவி பச்சமுத்து, துணைத் தலைவர் டாக்டர் ராஜூ சிவசாமி, நரம்பியல் துறையின் இயக்குனர், மூத்த ஆலோ சகர் டாக்டர் யு. மீனாட்சி சுந்தரம் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை துறை யின் இயக்குனர், மூத்த ஆலோசகர் டாக்டர் கே.ஆர். சுரேஷ் பாபு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment