திருவள்ளூர் அக். 25- பூதூர் கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 2 வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். திருவள்ளூர் பொன்னேரி அடுத்த சோழவரம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் குளம் இருந்த பகுதியை தனியார் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள் கட்டியிருந்ததாக தெரிகிறது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஆல்பிஜான்வர்கீசிடம் புகார் செய்யப்பட்டது. அவரது உத்தரவின் பேரில், பொன்னேரி தாசில்தார் செல்வகுமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். இதனை அடுத்து தாசில்தார் உத்தரவின் பேரில், மண்டல துணை தாசில்தார் பாரதி, வருவாய் ஆய்வாளர் சந்தானலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அதிகாரிகள் பொக்லைன் எந்திர உதவியுடன் அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 2 வீடுகளை இடித்து அகற்றி நிலத்தை மீட்டனர். பின்னர் அந்த இடத்தில் அரசுக்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்தனர்.
No comments:
Post a Comment