ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பெண் ஒருவரையோ பார்ப்பனர் அல்லாதாரையோ தலைவராக ஒப்புக்கொள்வார்களா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பெண் ஒருவரையோ பார்ப்பனர் அல்லாதாரையோ தலைவராக ஒப்புக்கொள்வார்களா?

திக் விஜய்சிங் கேள்வி

புதுடில்லி, அக். 7- ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயண தேசிய ஒருங்கிணைப்பாளரும், மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவ ரும், காங்கிரசு கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தை நோக்கி கேள்வி எழுப்பி யுள்ளார். அதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு பெண் ஒருவரை தலைவராக நியமனம் செய்ய தயாரா? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் விஜயதசமி விழா என்கிற பெயரில் கொண்டாடப்பட்ட விழாவில் பேசுகையில், பெண்கள் அதிகாரம் குறித்து பேசினார். 

அதுகுறித்து திக் விஜய்சிங் தம்முடைய டிவிட்டர் பதிவில், ஆர்.எஸ்.எஸ். மாறி வருகிறதா?  சிறுத்தை எப்போதாவது தன் புள்ளியை மாற்றிக்கொள்ளுமா? அடிப்படையிலேயே ஆர்.எஸ்.எஸ். தன்னுடைய குணத்தை மாற் றிக்கொள்வது உண்மையானால், மோகன்பகவத்திடம் கேட்கப்பட வேண்டிய சில கேள்விகள் உள் ளன. 

அவர்கள் இந்து ராஷ்டிரம் என்பதை கைவிடுவார்களா? ஆர். எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக (சர்சங் ஜாலக்) பெண் ஒருவரை நியமிக்க முன்வருவார்களா? கொன் கஸ்ட், சித்பவன், பார்ப்பனர் அல்லாதார் வகுப்பிலிருந்து அடுத்த தலைவரை நியமிப்பார் களா? பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப் பட்ட, பழங்குடியினத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். தலைவராக ஒருவர் வருவதை ஒப்புக்கொள்வார்களா?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்வதாயின், சிறு பான்மை இனத்தவர்களுக்கு உறுப் பினர் சேர்க்கை திறந்து விடப்படுமா?

என்னுடைய அனைத்து கேள் விகள், அய்யங்களுக்கும் நேர்மறை யான விளக்கங்கள் அளிக்கப்பட் டால், ஆர்.எஸ்.எஸ்.சுடன் எனக்கு பிரச்சினை ஒன்றும் இருக்கப் போவதில்லை. மோகன்பகவத் அவர்களே மேற்கண்டவற்றை நீங்கள் செய்வீர்களானால், உங்கள் அபிமானியாக இருக்க நான் தயார்.

இவ்வாறு திக்விஜய்சிங் டிவிட் டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment