ஒன்றிய அரசு பணி தேர்வில் கன்னட மொழி : புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது- மேனாள் முதலமைச்சர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

ஒன்றிய அரசு பணி தேர்வில் கன்னட மொழி : புறக்கணித்திருப்பது கண்டிக்கத்தக்கது- மேனாள் முதலமைச்சர்

பெங்களூரு அக்.30 ஒன்றிய அரசு பணிகளில் மாநில மொழியான கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், இதற்கு எதி ராக வீதியில் இறங்கி போராட்டம் நடத் தப்படும் என்று கருநாடக மேனாள் முத லமைச்சர் குமாரசாமி எச்சரித்துள்ளார்.  

  ஒன்றிய அரசில் காலியாக இருக்கும் பணிகளுக்கு தற்போது ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஒன்றிய அரசு பணிகளுக்கு நடைபெறும் எழுத்து தேர்வுகளில் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே எழுத வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்ப தற்கு கன்னட ரக்‌ஷனே வேதிகே உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கன்னட மொழியை புறக்கணித்திருக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று கன்னட அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மேனாள் முதலமைச்சர் குமாரசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-  

ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வுகளை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் தான் எழுத வேண்டும் என்று ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. ஒன்றிய அரசு பணிகளுக்கான தேர்வில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டு இருப்பது கண்டிக்கத்தக்கது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனதாதளம்(எஸ்) கட்சி வீதியில் இறங்கி போராட்டம் நடத்தும். ஹிந்தி மற்றும் ஆங்கில மொழியில் தான் தேர்வு எழுத வேண்டும் என்ற உத்தரவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும். அத்துடன் அனைத்து மாநில மொழிகளிலும் தேர்வு எழுத ஒன்றிய அரசு உத்தரவிட வேண்டும். மாநில மொழிகள் புறக் கணிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.  

ஒன்றிய பா.ஜனதா அரசும், மாநில பா.ஜனதா அரசும் இரட்டை வேடம் போடுகிறார்கள். ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை பற்றி கருநாடக அரசு ஏன் கேள்வி எழுபபுவதில்லை. கன்னடர் களின் உரிமைகளை பறிக்க ஒன்றிய அரசு முயற்சிக்கிறது. இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்


No comments:

Post a Comment