டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பொது ஒழுங்கு, காவல்துறை இரண்டுமே மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதில் ஒன்றிய அரசு தலையிடுவது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்கிறது தலையங்க செய்தி.
தி டெலிகிராப்:
* மேகாலயாவில் வேலையில்லாத் திண்டாட் டத்தை எதிர்த்தும், பழங்குடியின இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை இடஒதுக்கீடு வழங்கும் அரசாங்கக் கொள்கையைக் கோரியும் காசி ஜெயின் டியா மற்றும் காரோ மக்களின் செல்வாக்குமிக்க கூட்டமைப்பு ஷில்லாங்கில் மிகப் பெரிய பேரணி நடத்தியது.
* தேர்தல் ஆணையத்தின் முதன்மைப் பணியான தேர்தல் விதிமுறைகளை புறநிலையாக அமல்படுத்துவதில் தவறிவிட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் என்ன வாக்குறுதி அளிக்கின்றன என்பது தேர்தல் ஆணையத்தின் அதிகார வரம்பில் இல்லை. வகுப்புவாத அரசியல், வெறுப்பு பேச்சு, மாதிரி நடத்தை விதி மீறல், சம நிலை போன்றவற்றில் தற்போதுள்ள சட்டங்களை தேர்தல் ஆணையம் கடுமையாக அமல்படுத்தியிருக்க வேண்டும் என கருத்து.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment