திருநெல்வேலி, அக். 30- வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் தயாரிக்க வேண்டும் என நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநகராட்சி கூட்டம் நெல்லை மாநகராட்சி மய்ய அலுவலகத்தில் ராஜாஜி 28.10.2022 அன்று மண்டபத்தில் நடைபெற்றது.
மேயர் சரவணன் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:- நெல்லை மாநகராட்சியில் வட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகை யில் 2 ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. மழை நீர் வடிகால் அனைத்தும் தூர்வாரும் பணி நடை பெற்று வருகிறது. அப் துல் ரகுமான் முதலாளி நகரில் குடியிருப்புகளுக் கும் தண்ணீர் புகுந்து விடாமல் தடுக்கும் வகை யில் ஓடையை தூர்வார கடந்த வாரம் பொது மக்கள் கோரிக்கை விடுத் தனர். உடனடியாக பணி கள் தொடங்கி நடை பெற்று வருகிறது. அதே போல் மாநகராட்சி கவுன் சிலர்கள் அனைவரும் தங்களது பகுதியில் மழை நீர் தேங்காத வகையில் அதிகாரிகள், பணியாளர் கள் அடங்கிய கண்காணிப் புக் குழுவுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மழைக்காலத்தில் மழையால் ஏற்படும் பாதிப்புகளை மாநகராட் சிக்கு உடனடியாக தெரி விக்கும் வகையில் மாநக ராட்சியில் 24 மணி நேர மும் செயல்படும் பொது மக்கள் சேவை மய்யம் அமைக்கப்பட்டு உள் ளது. இந்த மய்யத்தை 1800 425 46 56 என்ற இலவச தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம். நெல்லை மாநகராட்சியில் தினமும் 170 டன் குப்பை சேகரம் ஆகிறது.
ராமையன்ட்டியில் மக்கும் குப்பை, மக்காத குப்பைககளை நவீன தொழில்நுட்ப உதவியு டன் தரம் பிரிக்கவும், இதில் மக்கும் குப்பை களை எந்திரம் மூலம் மக்கச் செய்து உரமாக்கும் வகையில் ரூ.4 கோடியில் பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கவுன்சிலர்கள் விவா தத்துக்கு பிறகு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய பா.ஜனதா அர சின் ஹிந்தி திணிப்பு கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இந்த தீர்மானத் துக்கு அனைத்து கவுன் சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர். மேலும் வறு மைக் கோட்டுக்கு கீழ் உள்ளோர் பட்டியல் தயாரிக்க வேண்டும், என வும் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது. அ.தி.மு.க கவுன்சிலர்கள் வருகைக் கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சந்திர சேகர், அமுதா மற்றும் ஜெகநாதன், முத்துலட் சுமி ஆகிய 4 பேரும் வந்திருந்தனர். இதில் ஜெகநாதனும், முத்து லட்சுமியும் ஏற்கெனவே தொடர்ந்து 3 கூட்டங் களுக்கு வராததால் அவர் களை தகுதி நீக்கம் செய் யும் தீர்மானம் முன் வைக்கப் பட்டிருந்தது. ஆனால் 2 பேரும் மதுரை நீதிமன்றம் கிளையில் தடை வாங்கியதால், அந்த தகுதி நீக்க தீர்மானம் ஒத்தி வைக்கப்பட்டது. கூட்டத்தில், மண்டல தலைவர்கள் மகேசுவரி, ரேவதி பிரபு, பிரான்சிஸ், கதிஜா இக்லாம் பாசிலா மற்றும் கவுன்சிலர்கள், செயற்பொறியாளர்கள் பாஸ்கர், வாசுதேவன் மற் றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment