இலங்கை பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடியில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த மாற்றுத்திறனாளி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 25, 2022

இலங்கை பொருளாதார நெருக்கடி - தனுஷ்கோடியில் குடும்பத்துடன் தஞ்சமடைந்த மாற்றுத்திறனாளி

ராமேசுவரம், அக். 25- இலங் கையில் இருந்து இதுவரை 184 இலங்கை தமிழர்கள் தனுஷ் கோடிக்கு வந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளதார நெருக்கடியால் உணவு உள்ளிட்ட அத்யா வசிய பொருட்களின் விலை கள் கடுமையாக உயர்ந்துள் ளது. இதனால் இலங்கையில் உள்ளவர்கள் தமிழ்நாட்டை நோக்கி தஞ்சமடைந்து வரு கின்றனர். 

இந்த நிலையில், இலங்கை யின் திருக்கடலூரை சேர்ந்த ஜனார்த்தன் என்ற மாற்றுத்திற னாளி, தனது மனைவி பிர வீனா மற்றும் இரு குழந்தை களுடன் ராமேசுவரத்திற்கு வந்துள்ளார். படகு மூலம் சேராங்கோட்டை பகுதிக்கு வந்திறங்கிய அவர்களை, ராமேஸ்வரம் கடற்படையி னர் தடுத்து நிறுத்தினர். மண் டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களை கடற்படை காவல் துறையினர் விசாரித்தனர். 

அதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், அங்கு வாழ வழியில்லாமல் தனுஷ்கோ டிக்கு வந்தததாக ஜனார்த்த னன் கூறியுள்ளார். 

இதையடுத்து அவர்கள் மண்டபம் அகதிகள் முகா மிற்கு அனுப்பி வைக்கப்பட் டனர். இலங்கையில் இருந்து இதுவரை 184 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment