சென்னை, அக். 29- இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு மீனவர்களை யும், அவர்களது மீன் பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை மேற் கொள்ள வலியுறுத்தி, ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்க ருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மிழிஞி-ஜிழி-10-விவி-365 என்ற பதிவெண் கொண்ட விசைப்படகில் 27.-10.-2022 அன்று மீன் பிடிக்கச் சென்ற ஏழு தமிழ்நாடு மீனவர்கள், இலங்கைக் கடற்படையி னரால் கைது செய்யப் பட்டுள்ளனர். ஏற் கெனவே தமிழ்நாடு மீன வர்களின் 98 மீன்பிடிப் படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்ப தால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ் நாடு அரசு உறுதிபூண்டு உள்ளது என்பதை மீண் டும் வலியுறுத்த விரும்பு கிறேன். பாக்ஜலசந்திப் பகுதியில் நமது மீனவர் களின் பாரம்பரிய உரி மைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்குத் தொடர்ச்சியான அச் சுறுத்தலாகும். எனவே, இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது, இதுபோன்ற தொடர்ச்சி யான அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப் பதை உறுதி செய்திட, வலுவான மற்றும் ஒருங் கிணைந்த நடவடிக்கை கள் எடுக்கப்பட வேண்டு மென்ற தனது முந்தைய யோசனையை மீண்டும் வலியுறுத்த விரும்புகி றேன்.
சிறை பிடிக்கப்பட் டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடு விக்கத் தேவையான நட வடிக்கைகளை உடனடி யாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் முதல மைச்சர் மு.க. ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரை கேட் டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment