கல்லக்குறிச்சி, அக். 25- 22-.10.-2022 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லக்குறிச்சி மாவட்டத் திரா விடர் கழகம்; பகுத்தறிவாளர் கழ கம்; மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணி; மாவட்ட திராவிடர் மாண வர் கழகம் ஆகியவை சார்பாக கலந்துரையாடல் கூட்டம் மண்ட லத் தலைவர் வழக்குரைஞர்
கோ.சா.பாஸ்கர் தலைமையில் நடை பெற்றது. வரவேற்புரை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் ச.சந்தரராசன் ஆற்றினார்.
மாவட்டத் தலைவர் ம.சுப்ப ராயன், திராவிடர் கழக பொதுக் குழு உறுப்பினர் த.பெரியசாமி , மாவட்ட திராவிடர் கழக இளை ஞரணித் தலைவர் அ.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 1) விடுதலைச் சந்தா சேகரிப்பு 2) பெரியார் -1000 தேர்வில் இம் மாவட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிச ளிப்பு, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளான வரும் டிசம்பர் திங்கள் இரண்டாம் நாள் சுயமரியாதை நாளாகக் கொண் டாடுதல் 4)கனடா-டொராண் டோவில் நடைபெற்ற பெரியார் பன்னாட்டு அமைப்பு சமுக நீதி மூன்றாவது மாநாட்டில் கலந்து கொண்டு வந்துள்ள மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் ம.சுப்ப ராயன் பேசிய பயண அனுபவங்கள் ஆகியவை பற்றி மாநில திராவிடர் கழக மருத்துவரின் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார் , கலந் துரையாடல் கூட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர் உள்பட பலர் பேசினார்கள். இறுதியில் கல்லக் குறிச்சி நகர திராவிடர் கழகத் தலைவர் இரா.முத்துசாமி நன்றி கூறினார்.
இக் கலந்துரையாடல் கூட் டத்தில் விழுப்புரம் மண்டல திரா விடர் மாணவர் கழக செயலாளர் திராவிட புகழ், கல்லக்குறிச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் வீ.முருகேசன் , மூரார் பாளையம் கிளைக்கழகத் தலைவர் இரா.செல்வமணி , சங்கராபுரம் வட்ட திராவிடர் மாணவர் கழகத் தலைவர் ஹம் மா.ஏழுமலை கல்லக்குறிச்சி நகர செயலாளர் நா.பெரியார், திராவிடர் மாணவர் கழகத் தோழர்கள் அப்துல் மாலிக், எழில் இராகுலன், எழில் ஆசைத் தம்பி உள்பட பலர் கலந்து கொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் கனடா சென்று வந்த மாவட்டத் தலைவர் ம.சுப்ப ராயன் சிற்றுண்டி வழங்கினார்.
நிறைவேற்றப் பட்ட
தீர்மானங்கள்:
1) விடுதலைச் சந்தாக்கள் 200 / நம்மாவடடம் சார்பாக சேகரித்து தமிழர் தலைவர் பிறந்த நாளில் வழங்குவதென தீர்மானம் நிறை வேற்றப்பட்டது
2) பெரியார் -1000 வினாடி வினா எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா கல்லக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்துவ தென தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.
3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை சுய மரியாதை நாளாக மாவட்டம் முழுமையும் தந்தைப் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண் டாடுவது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
No comments:
Post a Comment