சென்னை, அக்.6- குறைந்த அளவு ஊடுருவக்கூடிய ரோபாட் டிக் அறுவை சிகிச்சை (Robotic Surgery) முறையை வழங்குவதன் மூலம், பலரின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு சென் னையின் முன்னணி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளில் ஒன்றாகிய சென்னை-வடபழனி, சிம்ஸ் மருத்துவமனை வெர்சியஸ் ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறையைத் தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய சிகிச்சை முறையை நேற்று (5.10.2022) தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எம். குழுமத்தின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து இந்நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை மருத்துவக் குழுவினருக்கும் நோயாளிகளுக்கும் மிகப் பெரிய வாய்ப்பாகும். அதிக செலவில்லாத, கட்டுப்படியாகக்கூடிய கட்டணத்தில் தொடங்கி, குறைந்த வலி - அதிகம் ஊடுருவாத தன்மை, தழும்புகள் மற்றும் ரத்த இழப்பும் குறைவு, நோயாளிகள் விரைவாக குணமடையும் வசதி, குறைந்த நாள் மருத்துவமனையில் தங்குதல் போன்ற நன்மைகளின் மூலம் அவர்களுடைய வழக்கமான வேலைகளை மீண்டும் தொடங்க பாரம்பரிய அறுவை சிகிச்சை முறைகளைவிட இந்தப் புதிய ரோபாட்டிக் அறுவை சிகிச்சை முறை உள்ளது.
No comments:
Post a Comment