இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

இன்று தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

சென்னை,அக்.29- தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள் ளது. வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சில பகுதி களில் அக்.31, நவ.1ஆம் தேதிகளில் மிகக் கன மழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் பா.செந்தாமரை கண் ணன் நேற்று (28.10.2022) வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ள தாவது,

தமிழ்நாடு நோக்கி வீசும் காற்றில்மாற்றம் ஏற்பட்டு, கிழக்கு திசையில்இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள் ளது. எனவே,தமிழ்நாடு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அக்.29ஆம் தேதி (இன்று) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

வட தமிழ்நாடு கட லோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ டுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்.29, 30, 31, நவ.1 ஆகிய 4 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங் களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

29ஆம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட் டங்கள், கடலூர், விழுப் புரம், தேனி, புதுக் கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தென் காசி, தூத்துக்குடி மாவட் டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், 30ஆம் தேதி கடலூர், விழுப்புரம் நீங்கலாக மேற்கூறிய மாவட்டங் கள் மற்றும் திருநெல் வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிகக் கனமழை: 

31ஆம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணா மலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத் தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல் வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நவ.1ஆம் தேதி திரு வள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங் கல்பட்டு, திருவண்ணா மலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென் காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட் டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment